உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / புதுவிதமான வாசிப்பை உணர்ந்தேன்

புதுவிதமான வாசிப்பை உணர்ந்தேன்

தினமலருக்கும் எனக்குமான பிணைப்பு சுமார் 32 வருட காலம் என்று சொல்லலாம். நாளிதழ் வாசிக்கும் பழக்கம், எனக்கு, பள்ளி ஆசிரியையான என் தாயிடம் இருந்து வந்தது. 'அன்றாட நிகழ்வுகளை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் அப்டேட்டடாக இருக்க முடியும்' என்று, அப்போதே சொல்வார் அவர். பலதரப்பட்ட தினசரிகளை வாசித்து வந்த நான், 'தினமலர்' நாளிதழை வாசிக்கத் துவங்கிய போது, புதுவிதமான வாசிப்பை உணர்ந்தேன். காரணம், செய்திகளில் தேவையற்ற கருத்துத் திணிப்புகள் இல்லாமல், உள்ளது உள்ளபடி, செய்தி, செய்தியாக தரப்பட்டு இருந்தது. மேலும், வார்த்தை ஜாலங்களால் வாசகர்களை குழப்பாமல், வாசிப்பை நேசிக்க வைக்கும் வகையிலான எளிய நடையில் செய்திகளை தரும் தனிப்பாணி, தினமலருக்கே உரித்தானது. 'உண்மையின் உரைகல்' என்ற தலைப்பு வாசகத்திற்கு ஏற்ப, செய்திகளின் உண்மைத்தன்மை வெளிப்படையாக இருப்பதால், வழக்கறிஞரான எனக்கு செய்திகளின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடிகிறது. வார இதழ்களின் வாசகர்களை ஈர்க்கும் விதமாக, 'வாரமலர்' என்ற இணைப்பினை, அதாவது நாளிதழுக்கு இணைப்பாக வார இதழினை அளிக்கும் புதுமையை புகுத்தியது தினமலர் தான். அதில் அனைத்து தரப்பினருக்குமான விஷயங்களை அளிப்பது தனிச்சிறப்பு. அரசியல்வாதியாக, அதிலும் பா.ஜ., ஆன்மிக பிரிவின் மாநில தலைவராக இயங்கும் எனக்கு, அரசியலின் அன்றாட நிகழ்வுகளை துல்லியமாக அறிந்துகொள்ள தினமலர் வாசிப்பு உதவியாக இருக்கிறது. ஜோதிடனும் ஆன்மிக விஷயங்களில அதிக நாட்டம் உள்ளவனுமான எனக்கு, தினமலரின் 'ஆன்மிக மலர்' இதழ் வாசிப்பு, நாளிதழை மட்டும் வாசிப்பதாக இல்லாமல், பக்திபூர்வமான இதழினை வாசிக்கும் உணர்வையும் அளிக்கிறது. தினமலர் நடத்தும் விஜயதசமி விழாவில் இருமுறை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதை என் பாக்கியமாக பார்க்கிறேன். இன்னும் சிறுவர்களுக்கான 'சிறுவர் மலர்' பற்றி கேட்கவே வேண்டாம், குழந்தைகளை புத்திசாலிகளாக்குவதோடு, வாசிக்கும் பெரியவர்களை குழந்தைகளாக உணரவைத்து மகிழவும் வைக்கிறது. இத்தனைக்கும் மேலாக, தனது வாசகர்களின் மீதான அக்கறையில், துவங்கிய நாள் முதல், 75 ஆண்டுகளாக துளியும் குறை இல்லாமல், அவர்கள் விருப்பம் அறிந்தும், சற்றும் தரம் தாழாமலும் இயங்குவதாலேயே, எனக்கு மட்டுமன்றி வாசிக்கும் அனைவரின் இதயங்களிலும் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது தினமலர். 75ஆவது வருடத்தினை கொண்டாடும் தினமலர் மேலும் பல நூற்றாண்டுகள் காண மனமார்ந்த வாழ்த்துகள். நன்றியுடன், ஷெல்வீ ஜோதிடர், வழக்கறிஞர் மற்றும் மாநில தலைவர், பா.ஜ., ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை