மேலும் செய்திகள்
உண்மை சொல்லும் துணிச்சல் தினமலர் உடைய உயிரோட்டம்
12-Nov-2025
தமிழர்களின் கலாசார அடையாளம் தினமலர்
11-Nov-2025
புதுமைக்கு புதுமையாய் திகழ்கிறது தினமலர்
11-Nov-2025
நேர்கொண்ட பார்வையோடு பணியாற்றும் தினமலர்
11-Nov-2025
சரித்திரச் சிறப்புமிக்க 75வது ஆண்டு நிறைவு எனும் இந்த மகத்தான தருணத்தில், தினமலர் நாளிதழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை மிகுந்த மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, உண்மை, நேர்மை மற்றும் பொறுப்புள்ள பத்திரிகை தர்மத்தின் விழுமியங்களை நிலைநிறுத்தி வரும் ஒரு நாளிதழின் பாரம்பரியத்தில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாகும். தினமலரின் பண்பட்ட பத்திரிகைப்பணி, சமூக உணர்வுடன் சமுதாய மாற்றங்களை செதுக்கியுள்ளது. 'தினமலர்' செய்திகள், வருங்காலத் தலைமுறைகள் விமர்சனப் பார்வையுடன் சிந்திக்கவும் தேசத்தின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கவும், உந்துசக்தியாக இருக்கிறன. கால மாற்றங்களுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்ட போதிலும், அதன் ஆரம்பக் கொள்கைகளில் நிலைபெற்று நிற்கிறது என்பதே தினமலரின் உண்மையான தனிச்சிறப்பு. மாற்றங்கள் நிறைந்த இக்காலத்தில், தொடர்ந்து நம்பகத்தன்மையின் சின்னமாகத் திகழ்கிறது. தேவையற்ற சத்தங்களை நீக்கி, நாட்டின் சமூக அடித்தளத்தை வலுப்படுத்தும் சமூக விழிப்புணர்வை வளர்க்க உதவுகிறது. உயர்கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் தலைமைக் பொறுப்பில் உள்ளவன் என்ற முறையில் கல்வித் தரத்தை மேம்படுத்துதல், சுகாதார விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் குடிமைக் கடமை உணர்வைத் தூண்டுதல் ஆகியவற்றில் 'தினமலர்' கொண்டுள்ள நிலையான உறுதிப்பாட்டை உளமாரப் பாராட்டுகிறேன். முன்னேற்றம், புத்தாக்கம் மற்றும் மனிதர்களின் சாதனைக் கதைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் அதன் பணிகள், நாங்கள் இளம் தலைமுறையினரிடம் உருவாக்க விரும்பும் இலட்சியங்களைப் பிரதிபலிக்கின்றன. இந்த மகத்தான தருணத்தில் ,தினமலரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைக்கும், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர் குழுவிற்கும், விசுவாசமிக்க வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனமார்ந்த பாராட்டுடனும் நல்வாழ்த்துகளுடனும், டாக்டர்.ஹரி சங்கர் மேகநாதன் துணைத்தலைவர் ராஜலட்சுமி கல்வி குழுமம்
12-Nov-2025
11-Nov-2025
11-Nov-2025
11-Nov-2025