மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
புழுதிவாக்கம், புழுதிவாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை இணைப்பிற்கான பிரதான குழாய், ராமலிங்கா நகர் பிரதான சாலையில் 1.2 கி.மீ., துாரத்திற்கு, 27 அடி ஆழத்தில் உள்ளது. சதாசிவம் நகர், ராமலிங்கா நகர், ராம் நகர் உள்ளிட்ட பகுதி கழிவுநீர், இந்த பிரதான குழாய் வழியாக கழிவுநீரேற்று நிலையம் சென்று, அங்கிருந்து பெருங்குடிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில், 24ம் தேதி, திடீரென சாலை உள்வாங்கி, மெகா பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்த குடிநீர் வாரியத்தினர், பள்ளத்தைச் சுற்றி தடுப்புகளை வைத்தனர். அச்சாலையில், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.அப்பகுதி குடியிருப்பு கழிவுநீர், நீரேற்று நிலையம் செல்ல, தற்காலிக குழாய் அமைத்து நீரேற்று இயந்திரம் வாயிலாக எடுத்துச் செல்லப்படுகிறது.இந்நிலையில், பிரதான குழாய் சீரமைப்பு பணி துவங்கி நடந்து வருகிறது. பணிகள் துரிதகதியில் முடித்து, இச்சாலையில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025