மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
மேட்டுப்பாளையம்;காரமடை சாலையில் இருந்த மணல் மேட்டை, தினமலர் செய்தியால், தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் அகற்றி உள்ளது. காரமடையில் இருந்து, மேட்டுப்பாளையத்தில் நகராட்சி எல்லை வரை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரம் முன் பெய்த கன மழையால், மழைநீரில் மண் மற்றும் மணல் அடித்து வந்தது. காரமடையில் இருந்து, மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, 100 அடி தூரத்துக்கு, சாலையின் பாதி அளவிற்கு மண் மற்றும் மணல் மேடு ஏற்பட்டு இருந்தது. இந்த சாலை வழியாக இரு சக்கர வாகனங்களில் இரவில் செல்பவர்கள், மணல் பாதையில் வாகனத்தை ஓட்டும் பொழுது, சறுக்கி கீழே விழுந்து, விபத்துக்கு உள்ளாகினர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் உடன் வருபவர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியானது. இந்த செய்தி எதிரொலியாக தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம், பொக்லைன் இயந்திரம் வாயிலாக மணல் மேட்டை அப்புறப்படுத்தியுள்ளது.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025