உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தொங்கும் மின் ஒயர் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி

தொங்கும் மின் ஒயர் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நகராட்சி வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் முதல் தளத்தில் எஸ்.பி.ஐ., வங்கி மற்றும் இதன் வாடிக்கையாளர் சேவை மையம் கீழ் தளத்தில் இடது புறம் உள்ளது. இங்கு தினமும் சேமிப்பு கணக்கு மூலம் பணம் பரிவர்த்தனைகள் பல்வேறு சேவை திட்டங்களில் விண்ணப்பிக்க தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்கு வந்து செல்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் இங்குள்ள மின் ஒயர் அறுந்து தொங்கியது. அசம்பாவிதம் நடப்பதற்குள் மின் ஒயரை சரி செய்ய கோரி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் மின்வாரியம் ஆபத்தாக தொங்கிக் கொண்டிருந்த மின் ஒயரை அகற்றிவிட்டு புதிய மின்ஒயர் அமைத்து சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ