உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / குடியிருப்பு கட்ட ஊராட்சி நடவடிக்கை கலெக்டர் உத்தரவின் பேரில் ஆய்வு

குடியிருப்பு கட்ட ஊராட்சி நடவடிக்கை கலெக்டர் உத்தரவின் பேரில் ஆய்வு

பந்தலூர்:பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பி.ஆர்.எப்., காலனி அமைந்துள்ளது. இங்கு அஜேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். பட்டா நிலத்தில் குடியிருக்கும் இவருக்கு சொந்த வீடு கட்ட முடியாத நிலையில், முழுவதும் 'பிளாஸ்டிக்' மூலம் குடிசை அமைத்து குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மின் வசதியும் இல்லாத நிலையில் இவர்களின் குழந்தைகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் அவலமும் தொடர்கிறது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் கடந்த, 26 ஆம் தேதி செய்தி வெளியானது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, சேரங்கோடு ஊராட்சி செயலாளர் சஜித் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்கான பெயர் பட்டியலில் அஜேஸ் பெயரும் சேர்த்துள்ளனர். விரைவில் வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கப்பட உள்ளது. இதனால் அவர்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை