மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு தரைத் தளத்தில் தண்ணீர் தேங்கிய பின்னணி குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ் நுாலகத்தை ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது: கடந்த ஞாயிறு பிற்பகலில் குறைந்த கால இடைவெளியில் 108 மி.மீ., அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் நுாலகத்தின் தரைதளத்திலுள்ள மழைநீர் தொட்டியில் பார்வையாளர்கள் கவனக்குறைவுடன் பிளாஸ்டிக் பைகள், பிஸ்கட் பாக்கெட் கவர்கள், பேப்பர், தெர்மாகோல் உள்ளிட்டவைகளை போட்டதால் மழைநீர் வெளியேற அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தரைத் தளத்தில் தேங்கியது. தகவல் அறிந்ததும் ஊழியர்களின் துரிதமான நடவடிக்கையால் மழைநீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது. அந்த சூழலிலும் நுாலகத்தின் அனைத்து பிரிவுகளும் எந்தத் தடையுமின்றி இயல்பாகவே இயங்கின. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க மழைநீர் குழாய்களின் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.இந்நுாலகம் நவீன கட்டுமான அம்சங்களுடன் அனைவரையும் கவரக்கூடிய வகையில் கட்டப்பட்டு, திறந்து ஓராண்டு நிறைவடைவதற்குள் 7.55 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்றார்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025