மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
சென்னை, 'நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் வருகைக்கு ஏற்ப, அரசு மருத்துவமனைகளுக்கு போதிய பராமரிப்பு நிதியை வழங்க வேண்டும்' என பொதுப்பணித்துறை கேட்டுள்ளது.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ஓமந்துாரார் பன்னோக்கு மருத்துவமனை, கிண்டி பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை உள்பட, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. மருத்துவமனையின் மின்சாதனங்கள், கழிவறைகள் உள்ளிட்ட கட்டட பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்கின்றனர். அன்றாட பராமரிப்பு பணிகளை, மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கத்தில் இருந்தும் நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் எண்ணிக்கை தகுந்தபடி பராமரிப்பு நிதியை அரசு ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால், கழிவறை சாதனங்கள், மின்துாக்கி உள்ளிட்டவை அடிக்கடி சேதம் அடைகின்றன.துாய்மை பணிகளை எத்தனை முறை மேற்கொண்டாலும், குப்பைகள் அதிகளவில் தேங்குகிறது. இதனால், பராமரிப்பு பணிக்கான நிதி ஆதாரம் இல்லாமல், பொதுப்பணித்துறை மட்டுமின்றி மருத்துவமனை நிர்வாகங்களும் தினறி வருகின்றன. இதுகுறித்து நமது நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளுக்கு போதிய பராமரிப்பு நிதியை அரசிடம் இருந்து பெற்றுத் தரும்படி பொதுப்பணித்துறை வாயிலாக, மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் கேட்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு, சட்டசபையில் மானியகோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், பராமரிப்பு பணிக்கு நிதி அதிகரிக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வு துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025