உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி பயன்பாட்டிற்கு வந்தது அங்கன்வாடி மையம்

தினமலர் செய்தி எதிரொலி பயன்பாட்டிற்கு வந்தது அங்கன்வாடி மையம்

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சி 13வது வார்டு பகுதிக்குட்பட்ட பிராயம்பத்து பகுதியில் அங்கன்வாடி மையம் இல்லாமல் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணி கடந்த 2023 ஜூலையில் துவங்கியது.இதேபோல் அங்கன்வாடி மையம் அருகே மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் பயன்பாட்டிற்காக 2022-23ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தின் 12 லட்சம் மதிப்பில் படிப்பகம் கட்டும் பணி துவங்கியது.இந்த இரு கட்டடங்கள் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் மின் இணைப்பு வழங்கப்பததால் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகியது.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து புதிய அங்கன்வாடி மையம் மற்றும் படிப்பகத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று திருமழிசை செயல் அலுவலர் வெங்கடேஷ், பேரூராட்சி தலைவர் மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து அங்கன்வாடி, படிப்பகத்தை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ