உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைப்பு

பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைப்பு

மதுராந்தகம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மாம்பாக்கத்தில் உள்ள பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைக்கப்பட்டு வருகிறது.மதுராந்தகத்திலிருந்து சித்தாமூர் வழியாக சூணாம்பேடு, செய்யூர் பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இதில், மாம்பாக்கம் பகுதியில், பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.நிழற்குடையில் இருக்கைகள் சேதம் அடைந்து இருந்ததால், பயணியர் கால்கடுக்க நின்று, பேருந்தில் பயணம் செய்து வந்தனர்.பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, மதுராந்தகம் நகராட்சி பொது நிதியின் வாயிலாக, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயணியர் நிழற்குடையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை