உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தம்மனுார் சாலையோர கிணற்றுக்கு தடுப்பு அமைப்பு

தம்மனுார் சாலையோர கிணற்றுக்கு தடுப்பு அமைப்பு

வாலாஜாபாத்: நம் நாளிதழில் வெளியான செய்தியின் தொடர்ச்சியாக தம்மனுாரில் சாலையோர கிணற்றுக்கு இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. வாலாஜாபாத்தில் இருந்து, அவளூர், கண்ணடியன்குடிசை வழியாக தம்மனுார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், தம்மனுார் அருகே சாலை ஓரத்தில் விவசாய கிணற்றுக்கு தடுப்பு ஏற்படுத்தாமல் இருந்தது. இந்த கிணற்றங்கரை ஓரம் செடிகள் அதிகம் வளர்ந்து இருந்ததால் பாதுகாப்பு போன்ற தோற்றம் காணப்பட்டது. செடி, கொடிகள் அகற்றும் பட்சத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், அச்சாலையோர விவசாய கிணற்றுக்கு தடுப்பு ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது. இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை மேற்கொண்டு சாலையோர கிணற்றுக்கு இரும்பு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ