உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி நிமிர்ந்தது கம்பம்

தினமலர் செய்தி நிமிர்ந்தது கம்பம்

சோழவந்தான்: கருப்பட்டி ஊராட்சி பொம்பன்பட்டியில் சில நாட்களுக்கு முன் பலத்த காற்று வீசியதில் மின்கம்பங்கள் சாய்ந்தன. கம்பிகள் சேதமடைந்து அருகே மயானம், விவசாய மோட்டார் களுக்குரிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மயானத்தில் தொட்டியில் தண்ணீர் இல்லாததாலும், இரவில் வெளிச்சம் இல்லாததாலும் இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அப்பகுதியினர் சிரமமடைந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. மின்வாரிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின்கம்பங்களை சீரமைத்தனர். அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை