உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி: கழிவுகள் அகற்றம்

தினமலர் செய்தி: கழிவுகள் அகற்றம்

மேலுார்: மலம்பட்டியில் இருந்து நான்கு வழிச்சாலைக்கு சர்வீஸ் ரோடு சொல்கிறது. இந்த ரோட்டில் குடியிருப்புகள், பள்ளி, அலுவலகம், உணவகங்கள், வழிபாட்டுதலங்கள் உள்ளன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. மேலுாரில் உள்ள கோழிக் கடைகளின் கழிவுகளை சர்வீஸ் ரோட்டோரம் கொட்டுவதால் துர்நாற்றத்துடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி எஸ்.ஐ., தினேஷ் குமார் ஏற்பாட்டில் கோழி கழிவுகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை