உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

தினமலர் செய்தி எதிரொலி செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேட்டில், ராமானுஜர் சன்னிதி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. ராமானுஜருக்கு, இந்த இடத்தில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயாருடன் காட்சியளித்ததாக கருதப்படுகிறது.ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ராமானுஜர் சன்னிதியில் நடைபெறும் அனுஷ்டான குளம் உற்சவத்தின்போது, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வேடுவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ராமானுஜர் அவரித்த திருவாதிரை நட்சத்திரைத்தையொட்டி மாதந்தோறும் திருவாதிரையன்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.பல்வேறு சிறப்பு பெற்ற இந்த சன்னிதி சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இந்த சன்னிதியை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து நம் நாளிதழில் கடந்த மாதம் 25ம் தேதி செய்தி வெளியானது. இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி பொறியாளர், நேற்று காலை செவிலிமேடு ராமானுஜர் சன்னிதியில் சிதிலமடைந்த பகுதியை ஆய்வு செய்தார்.தொடர்ந்து திருப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்ய கோவில் முழுதும் அளவீடு செய்தார். திருப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டபின் பணியை துவக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என, காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை