உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  தினமலர் செய்தி சீரானது தொட்டி

 தினமலர் செய்தி சீரானது தொட்டி

சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடியில் ஊராட்சி அலுவலகம் அருகே குடிநீர் தொட்டி சேதமடைந்திருந்தது. துாண்களின்பல இடங்களில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிந்தது. இதனால் விபரீதம் விளைய வாய்ப்பிருந்தது. நீண்ட நாட்களாக 'பெயின்ட்' அடிக்காமல் பல இடங்களில் கருப்பு நிறமாக மாறியிருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து தொட்டியை சீரமைத்தனர். அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !