மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் கிடைத்தது வெளிச்சம்
10-Sep-2025
மேலுார்; தும்பைப்பட்டி லாரி பார்க்கிங் பகுதியில் ஹைமாஸ் விளக்கு 2 மாதங்களுக்கு மேல் செயல்படாததால் வாகன ஓட்டிகள் ஓய்வெடுக்க அச்சப்பட்டனர். ஓய்வின்றி தொடர்ந்து வாகனங்களை இயக்குவோருக்கு நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் ஏற்பட்டது. இருட்டான இப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவோரின் உயிர், உடமைகளுக்கு பாதுகாப்பாற்ற நிலை இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. உடனே நடவடிக்கை எடுத்ததால், ஹைமாஸ் விளக்கு பயன்பாட்டிற்கு வந்தது. மகிழ்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
10-Sep-2025