தினமலர் எதிரொலி: கணித பூங்கா பிரச்னைக்கு கிடைத்து விட்டது தீர்வு
கோவை: வ.உ.சி. பூங்கா அருகே ரூ.54 லட்சத்தில் மாநகராட்சி கணித பூங்கா அமைத்தது. இங்கு மாணவர்களுக்கு கணித கோட்பாடுகளை எளிதில் விளக்கும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. பூங்கா தற்போது பயன்பாட்டில் இல்லை. பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு மக்கள், கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, ரூ.24.80 லட்சத்தில் புனரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி, மாநகராட்சி கவுன்சிலில் பெறப்பட்டுள்ளது. விரைவில் வேலைகள் துவங்கும் என்றனர் அதிகாரிகள்.