மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
திருப்பூர்:'தினமலர்' நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானதையடுத்து, பழுதான பஸ்களை டிப்போவுக்கு வரவழைத்து உடனடியாக அதிகாரிகள் சீரமைத்தனர்; பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ஜன்னல் கம்பிகள் கயிறு போட்டு கட்டப்பட்டும், இருக்கைகள் கிழிந்தும் காணப்படுவதாக, 'தினமலர்' நாளிதழில் நேற்று படங்களுடன் செய்தி வெளியானது.இதையடுத்து அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தில் இருந்து, திருப்பூர் மண்டல அதிகாரிகளை தொடர்பு கொண்ட உயரதிகாரிகள், உடனடியாக பஸ் பழுதை சரிசெய்து, பஸ்களை இயக்கத்துக்கு கொண்டு வர உத்தரவிட்டனர். மதிய உணவு இடைவேளையில் பஸ்கள் டிப்போவுக்கு கொண்டு வரப்பட்டு, பஸ் இருக்கை சீரமைக்கப்பட்டது.ஜன்னல் கம்பியில் கட்டப்பட்டிருந்த கயிறை அவிழ்த்து வெல்டிங் வைத்து சீர்செய்யப்பட்டது. பஸ் டிரைவர் இருக்கை அருகே இருந்த தரை இரும்புகளை மாற்றியமைக்க, பெருந்துறைக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. திறக்க முடியாத கண்ணாடிகள், மெக்கானிக் மூலம் சரிசெய்து, திறக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, பஸ்களில் பழுதுகள் மாலைக்குள் சரிசெய்யப்பட்டதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அனைத்து பஸ்களையும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சீரமைக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025