உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / ரூ.7.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மயானக்கூரை; தினமலர் செய்தி எதிரொலி

ரூ.7.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மயானக்கூரை; தினமலர் செய்தி எதிரொலி

வால்பாறை; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, நடுமலை சமாதானபுரத்தில் புதிய மயானக்கூரை அமைக்க பூமி பூஜை நடந்தது.வால்பாறை நகரில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் உள்ளது நடுமலை எஸ்டேட். இங்குள்ள எஸ்டேட்டில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்தப்பகுதியில் உள்ள மயானக்கூரை பாழடைந்த நிலையில் உள்ளதால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமலும், மக்கள் நிற்க கூட இடமில்லாமலும் அவதிப்படுகின்றனர்.கடந்த மூன்று ஆண்டுகளாக, புதர்சூழ்ந்த நிலையில் உள்ள மயானக்கூரையை இடித்து, புதிய மயானக்கூரை கட்ட வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதனையடுத்து, வால்பாறை நகராட்சி சார்பில், 7.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய மயானக்கூரை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.இதே போல், அக்காமலை எஸ்டேட் பகுதியில் இரண்டு இடங்களில், 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ