செய்தி எதிரொலி நெம்மேலி சாலை சீரமைப்பு
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் திருப்போரூர் - -நெம்மேலி சாலை இடையே, பகிங்ஹாம் கால்வாயில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.கானத்துார், முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை, கிருஷ்ணன்காரணை, பட்டிபுலம், சாலவான்குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த சாலை குறுகிய நிலையில், பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக இருந்தது. ஒரே நேரத்தில் எதிரெதிரே வாகனங்கள் செல்லும்போது, ஒதுங்கி செல்ல இடவசதி இல்லை.எனவே, விபத்தை தடுக்க, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், முதற்கட்டமாக சாலை பள்ளத்தில் ஜல்லிக்கற்கள் கலவை நிரப்பி சமன் செய்து, தற்காலிகமாக சரிசெய்தனர்.