உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / செய்தி எதிரொலி செம்பூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைப்பு

செய்தி எதிரொலி செம்பூர் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைப்பு

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே செம்பூர் கிராமத்தில், குடியிருப்புப் பகுதியில் நியாயவிலை கடை உள்ளது. இதில், 400க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.கடந்த 2000ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டடத்தில், நியாய விலை கடை செயல்பட்டு வந்தது. அக்கட்டடம் பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் சுவர்கள் விரிசல் அடைந்தும், மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்தும் மோசமான நிலையில் இருந்தது.மழைக் காலத்தில், மேல்தளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை பாதுகாக்க, ஊழியர்கள் அவதிப்பட்டுவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதன் விளைவாக, ஊரக வளர்ச்சி பொது நிதியில் இருந்து, 9.40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, அதே இடத்தில், புதிய கட்டடம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.தற்போது, 75 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் முடிந்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ