தினமலர் செய்தியால் அலுவலர் நியமனம்
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல் அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது.பேரையூர் செயல் அலுவலர் மணிகண்டன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இதனால் கவுன்சிலர்கள், பொதுமக்கள் செயல் அலுவலர் இன்றி சிரமப்பட்டனர். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாத அவல நிலை இருந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, டி.கல்லுப்பட்டி பேரூராட்சி செயலாளராக இடமாறுதல் செய்யப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.