தினமலர் செய்தியால் தீர்வு
சோழவந்தான்: சோழவந்தான் நாகா அவென்யூ அருகே மின் கம்பிகள் தாழ்வாகச் சென்றன. இதனைச்சுற்றி ஏராளமானோர் குடியிருக்கின்றனர். மேலும் சிறுவர்கள், விவசாயிகள் இதன் வழியே செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டு விபரீதம் விளைய வாய்ப்பிருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்தனர்.