மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயனற்று இருந்த சின்டெக்ஸ் தொட்டி 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக மூடப்பட்டது.கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலக பின்பக்கத்தில் உள்ள காலி இடத்தில், சின்டெக்ஸ் தொட்டி மண்ணில் பதிக்கப்பட்டு இருந்தது. இந்த தொட்டியானது இங்கு உள்ள குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வழங்க அமைக்கப்பட்டது. இந்த தொட்டி பயன்படுத்த முடியாத நிலையில் சேதம் அடைந்திருந்தது.தாலுகா அலுவலகம் வரும் பொது மக்கள் தங்கள் பணி முடியும் வரை இந்த அலுவலகத்தின் பின்பகுதியில் காத்திருப்பது வழக்கம். இங்கு அதிகளவு புதர் இருப்பதால் இந்த தொட்டி இருப்பது சரி வர தெரியாமலும் இருந்தது. இதனால், தொட்டி அருகே நிற்பதற்கு அச்சப்பட்டு வந்தனர். இதுபற்றி, 'தினமலர்' நாளிதழிலில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தொட்டியில் மேல்பகுதியை அகற்றி, மண் கொட்டி மூடியுள்ளனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025