அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பல பூத்களில் பா.ஜ.,வை விட குறைவான ஓட்டுகளை நாம் வாங்கியிருப்பது மான பிரச்னையாக உள்ளது. தேர்தல் பணியில் கட்சி நிர்வாகிகள் சுணக்கம் காட்டியதால்தான், தோல்வியடைய வேண்டியதானது. தி.மு.க.,வின் தவறான பிரசாரமும் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. தோல்விக்கு பின் மிக பெரிய வெற்றி வரும் என்பது கடந்த கால வரலாறு. டவுட் தனபாலு: தோல்விக்கு பின் வெற்றி வரும் என்றவரலாறு ஜெ., காலத்துடன் முடிஞ்சு போச்சு... 2019 லோக்சபாதேர்தல் துவங்கி, அஞ்சு வருஷமா பல தேர்தல்களில் அ.தி.மு.க., தோல்வி அடைஞ்சுட்டே தான் இருக்கு... பா.ஜ., வளர்ச்சி தான், உங்க தோல்விக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!பா.ம.க., தலைவர் அன்புமணி: மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாறிவிட்ட நிலையில்,'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம்' எனக் கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர்ஸ்டாலின், என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. 'தமிழக நிதி நிலைமை மேம்பட்ட பின், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வோம்' என, நிதி அமைச்சர் கூறி வருகிறார். இது, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்றழைக்கலாம் என்பதற்கு ஒப்பானதே.டவுட் தனபாலு: 'தமிழக நிதி நிலைமை ஒரு காலத்திலும்மேம்படாது... அது எக்கேடும் கெட்டு போகட்டும்... அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுக்கிறதுல மட்டும் குறை வச்சுடாதீங்க' என்பதை நாசுக்கா சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!பத்திரிகை செய்தி: வால்பாறை அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய நகர செயலர் பொன் கணேஷ், 'வரும் சட்டசபை தேர்தலில் பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றவுடன், துணை முதல்வராக முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பேற்பார்' என்றார். குறுக்கிட்ட வேலுமணி, 'அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் பதவிக்காக ஆசைப்படுபவன் அல்ல. மீண்டும் பழனிசாமி முதல்வராக வந்தால் போதும்' என, பேசி சமாளித்தார்.டவுட் தனபாலு: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், துணைமுதல்வரா பன்னீர்செல்வத் தைநியமித்ததன், 'பலனை' பழனிசாமி இன்னும் அனுபவிச்சிட்டு இருக்கார்... அதனால, வேலுமணிக்கு அந்த வாய்ப்பை பழனிசாமி தரவே மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!