உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க., ஆட்சியில், 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டு, இரண்டே முக்கால் ஆண்டுகளில், 51,757 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரே நாளில், 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும், அ.தி.மு.க., அரசின் சாதனையில் 10 சதவீதத்தைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சின்னு பொத்தாம் பொதுவாக சொன்னா எப்படி...? ஜெ., தலைமையில் நடந்த ஆட்சி, உங்க தலைமையில் நடந்த ஆட்சி என்றால், அதை குறிப்பிட்டிருப்பீங்களே... நீங்க பொத்தாம் பொதுவாக சொல்வதை பார்த்தாலே, பழனிசாமி ஆட்சியில் தான் இந்த சாதனை நடந்திருக்கு என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!lllதி.மு.க.,வைச் சேர்ந்த, துாத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி: இனி, எவனாது தி.மு.க.,வையோ, முதல்வரையோ பற்றி பேசினால், நேரடியாக 'அட்டாக்' பண்ணுங்கள். அவனை அடித்தாலும் சரி; விரட்டினாலும் சரி... எப்படியோ செய்யுங்கள். உங்க ஆக்ஷ னுக்கு பின், மறுபேச்சு பேசக்கூடாது. மிசா காலத்தையே பார்த்தவர்கள் நாம். தி.மு.க.,வில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அதனால் துணிந்து செயல்பட வேண்டும். டவுட் தனபாலு: எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர் என்றால், உங்க சாதனைகளை எடுத்து கூறி, பதிலடி தரணும்... அதை விட்டுட்டு, 'அடிங்க, உதைங்க' என்றால், உங்களிடம் எடுத்து சொல்ல சாதனைகள் எதுவுமில்லாம தான், வன்முறை வழியை நாடுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!lllநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: பருவ காலங்களில் மரங்களுக்கு இலையுதிர் காலம் என்ற ஒன்று உண்டு. அதேபோல, நாம் தமிழர் கட்சிக்கு தற்போது களையுதிர் காலம். கட்சியில் களையாக இருப்போர், தாங்களாகவே கட்சியில் இருந்து உதிர்ந்து விடுவர். டவுட் தனபாலு: ஒரு படத்தில் நடிகர் வடிவேலு, 'நீ எடுக்கிறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்'னு சொல்ற மாதிரி, உங்க கட்சியில் இருந்து விலகுறவங்க எல்லாரும் களைகள் தானா...? அப்படி என்றால், களைகளுக்கு தான் இத்தனை நாட்களா நீரூற்றி வளர்த்துட்டு இருந்தீங்களா என்ற, 'டவுட்' வருதே!lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anantharaman Srinivasan
பிப் 25, 2025 20:50

அன்று மேயர் சிட்டிபாபு மிசா வில் கைதாகி உள்ளே போய் நோய்வாய் பட்டு இறந்தார். இன்று அதிகார தோரணையில் பேசும் துாத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி அதை நினைவு கூர்வது அவருக்கு நல்லது.


srinivasan
பிப் 25, 2025 10:36

மிசா காலத்தில் பாலியல் குற்றத்திற்கு உள்ளே சென்று உதை வாங்கியர்கள் கூட மிசாவையே பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். ஏன் சாதாரண மக்கள் கூட மிசா காலத்தை பார்த்து விட்டு தான் இப்போதும் இருக்கிறார்கள்.


Dharmavaan
பிப் 25, 2025 07:58

சீமான் நல்ல பேச்சாளரை விளக்கியது விநாச காலே விபரீத புத்தி


D.Ambujavalli
பிப் 25, 2025 06:10

மைக் முன் நின்று எதிர்க்கட்சியை விளாச , கூட்டம் சேர்க்க தேவைப்பட்ட அந்த முக்கிய நபர் இன்று ‘களை ‘ ஆகிவிட்டார் உள்வீட்டு கழகத்தால் வெளியேறுகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியுமே


Rajan A
பிப் 25, 2025 05:32

மிசா விவகாரத்தில் ரெக்கார்டே இல்லை. அதற்கு பிறகு இந்தியாவுடன் கூட்டணி சேர்ந்த கதை. எல்லாம் மக்களுக்கு தெரியும். மாவு புளித்து, கெட்டும் போய்விட்டது. இது இன்டர்நெட் காலம். பழைய பொய்களை இன்னும் சொல்லாமல் இருந்தால் நல்லது


Suppan
பிப் 25, 2025 16:41

ஆம். ஷா கமிஷன் வெளியிட்ட மிசா கைதிகளின் லிஸ்டில் மேற்படி ஆசாமியின் பெயர் இல்லை அது ஏனென்று ஊருக்கே தெரியும்.


முக்கிய வீடியோ