உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ஜ., சட்டசபைக் குழு தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான நயினார் நாகேந்திரன்: ஏற்றுமதி அதிகரித்தால் தான், இந்திய ரூபாய் மதிப்பு உலக அளவில் உயரும். துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வணிகர்கள், ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். டவுட் தனபாலு: எங்கே... உற்பத்தி, வளர்ச்சி, ஏற்றுமதிங்கிற விஷயத்தையெல்லாம், தென் மாவட்ட மக்கள் சிந்திச்சுக்கூட பார்க்கக் கூடாதுங்கிறதால தான, கூடங்குளத்தையே மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க... ஸ்டெர்லைட் ஆலை கதி என்னாச்சு... சரி, விடுங்க... மத்தியில ஆட்சியில உங்க கட்சி இருக்கிறப்ப, நீங்க தைரியமா களமிறங்கி, தென் மாவட்டங்களை முன்னேத்துற வேலையில இறங்க என்ன தயக்கம்ங்கிற, 'டவுட்' எழுதே!வி.சி., பொதுச்செயலரும், எம்.எல்.ஏ.,வுமான சிந்தனைச்செல்வன்: 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒற்றுமையை பெற முழங்கிய பா.ம.க., திசைமாறி, தலித்களுக்கு எதிரான வன்மத்தை உமிழ்வது வேதனைக்குரியது. டவுட் தனபாலு: உங்களுக்கும், பா.ம.க.,வுக்கும் ஏழு என்ன... எட்டவே எட்டாத பொருத்தம் என்பது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்... ஆனா, 2011 தேர்தல்ல, விஜயகாந்த் கட்சியை ஜெயலலிதா அரவணைச்ச மாதிரி யாராவது இறங்கினா, நீங்க சம்மதிச்சே ஆகணும்ங்கிறதுல, 'டவுட்'டே இல்லையே!பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழக காவல்துறையை மிகச் சிறப்பாக பராமரிக்கிறோம் என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வரும் தமிழக அரசு, அதற்காக தலைகுனிய வேண்டும். இனியும் வெற்று வசனங்களை பேசிக் கொண்டு இருக்காமல், காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.டவுட் தனபாலு: தற்போதைய முதல்வர், எதிர்க்கட்சியில இருந்தப்ப, இப்படித்தான் வீர வசனம்லாம் பேசினாரு... 'மதுவை ஒழிப்பேன், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பேன், அரசு ஊழியர்கள் என் கண்கள்' என்பது போல பேசினார்... ஆட்சியைப் பிடிச்சு, கல்லா பெட்டியைப் பார்த்த பிறகுதான் தெரிஞ்சது, வாக்குறுதி எதையுமே நிறைவேத்த முடியாதுன்னு! எனவே, உங்களுக்கும் காலம் வரும்... வந்தால், இந்த வீர வசனங்களையெல்லாம் மக்கள் எடுத்துக் கொடுப்பாங்க... நீங்க தவிக்க வேண்டி இருக்கும் என்பதுல, 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 02, 2025 06:14

அப்படியெல்லாம் ஆட்சி அமைக்கும் காலம் வரவே வராது என்ற தைரியத்தில்தான் இப்படி முழங்குகிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை