நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: 'நாம் தமிழர் கட்சியின் ஓட்டுகள் சிதறுகிறது. அது, த.வெ.க-.,வுக்கு போகிறது' என, சொல்கின்றனர். த.வெ.க.,-விற்குசெல்பவர்கள், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களே கிடையாது. நான், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா காலத்திலே கட்சி துவங்கியவன். அவர்களைவிடவிஜய் பெரிய தலைவரா அல்லதுஅவர்களைவிட கூட்டம் அதிகம் வந்து விட்டதா?டவுட் தனபாலு: கருணாநிதி, ஜெ.,யைவிட பெரிய தலைவர்கள்யாரும் இல்லை என்பது உண்மைதான்... அதே மாதிரி, நடிகர்கள் கட்சியில் விஜய்க்குதான் இன்று முதலிடம் என்பதும்,'டவுட்'டே இல்லாத உண்மை!தமிழக துணை முதல்வர் உதயநிதி: அரசு திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டுவதை, பழனிசாமி விமர்சித்துள்ளார். கருணாநிதி பெயரை வைக்காமல்யார் பெயரை வைப்பது? யார் பெயரை வைக்க வேண்டுமோ, அதைத்தான் வைப்போம். மக்கள்நலனுக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்தும்போதுவிமர்சனங்கள் வரத்தான் செய்யும்.டவுட் தனபாலு: அரசு திட்டங்கள்என்பது, எல்லா மக்களுக்கும் பொதுவானது... அந்த மக்கள் எல்லாருக்கும் கருணாநிதியின்கொள்கைகள் பிடிக்குமா என்ற,'டவுட்' எழுதே... நீங்க, உங்க கட்சிபணத்தில் நலத்திட்டங்களை செய்து,அதற்கு கருணாநிதி பெயரை சூட்டினால், உங்களை யாரும் குறை சொல்லப் போறதில்லையே!தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புகுழு தலைவர் ஹெச்.ராஜா: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்ஜெயகுமார், என்ன பேசுகிறார்என அவருக்கே தெரியவில்லை.போகிற போக்கில், 'எனக்கு அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை; ஒட்டும் இல்லை, உறவும் இல்லை' என பேசி விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஜெயகுமார் பேச்சு அப்படியொரு அபத்தம். டவுட் தனபாலு: அது சரி... ஜெயகுமார் போல, 'அ.தி.மு.க.,உடன் இனி எக்காலத்திலும் ஒட்டும்இல்லை; உறவும் இல்லை'ன்னு உங்களால ஏன் துணிச்சலா சொல்ல முடியலை...? அதுக்கு உங்களுக்கு அதிகாரம் இல்லையாஅல்லது எதிர்காலத்தில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமையலாம்னு நினைச்சு அடக்கி வாசிக்கிறீங்களா என்ற, 'டவுட்' வருதே!