உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

த.வெ.க., தலைவர் நடிகர் விஜய்: அளவற்ற வறுமையை தாண்டினார், எம்.ஜி.ஆர்., 'கூத்தாடி' என்ற கூற்றை சுக்குநுாறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார்; அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்; அவரே, தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள் வணக்கம்.டவுட் தனபாலு: நீங்க சொல்ற இந்த சாதனைகளை எல்லாம், எம்.ஜி.ஆர்., 'ஓவர்நைட்'ல செய்யலை... படிப்படியாக வளர்ந்து, ரொம்பவும் சிரமப்பட்டு தான், அசைக்க முடியாத சக்தியாக மாறினார்... அவரை போலவே அரசியலில் ஜொலிக்க நினைக்கிற நீங்க, எம்.ஜி.ஆர்., உழைப்பின் முதல் படியையாவது தொட்டுருக்கீங்களா என்பது, 'டவுட்' தான்!தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அ.தி.மு.க., எனும் மாபெரும் இயக்கம் இணைய வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், பழனிசாமி தரப்பினர், இணைய முடியாது என்கின்றனர். உலகிலேயே, பிரிந்த சக்திகள் இணையக்கூடாது என கூறும் ஒரே நபர் பழனிசாமி என்பதை மக்களும், தொண்டர்களும் நன்கு அறிவர். அதையும் மீறி, கட்சி கட்டாயம் இணையும்; பழனிசாமி முகத்தில் கரி பூசப்படும். டவுட் தனபாலு: பழனிசாமி முகத்தில் கரி பூசுறீங்களோ இல்லையோ, நீங்க தான் அடிக்கடி, 'பல்பு' வாங்குறீங்க... தமிழக காங்கிரசாருக்கு, 'காமராஜர் ஆட்சி' மாதிரி, 'பிரிந்த சக்திகள் கட்டாயம் இணையும்' என்பது உங்களுக்கு, தணியாத, 'தாரக' மந்திரமாகிடுச்சோ என்ற, 'டவுட்' தான் வருது!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி: தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், கொலை, கொள்ளைகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆட்சியை அப்புறப்படுத்தியாக வேண்டும்; இல்லை என்றால், தமிழகத்தின் நிலை மோசமாகும். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்ப தலைவிக்கும், மாதம், 1,500 ரூபாய் வழங்கப்படும். இதை வாக்குறுதியாக அளிக்கிறோம்.டவுட் தனபாலு: மற்ற மாநிலங்கள்ல எல்லாம், மகளிர் உரிமைத் தொகை 2,000 - 2,500ன்னு, 'ஜெட்' வேகத்துல போயிட்டிருக்காங்க... நீங்க, 500 மட்டும் ஏத்துவோம்னா ஆதரவு இருக்குமா... அதையும் இப்ப இருக்கிற, தி.மு.க., அரசே தந்துடும் என்பதால, நீங்க இன்னும், 16 அடி பாயணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஜன 20, 2025 12:20

பலசாதனைகளை எம்.ஜி.ஆர்., ஓவர்நைட்ல செய்யலை. ஒவ்வொரு படிப்படியாக வளர்ந்து, சிரமப்பட்டு தான், அசைக்க முடியாத சக்தியாக மாறினார்... விஜய்க்கு LIFT ல் போவதுபோல் கஷ்டபடாமல் முதல்வர் நாற்காலிக்கு ஆசை.


angbu ganesh
ஜன 20, 2025 10:01

அப்பா இல்லேன்னா இவன் இல்ல குடும்பத்தோட வாழ துப்பு இல்ல எப்படி நாட்டை காப்பாத்துவான்


D.Ambujavalli
ஜன 20, 2025 06:08

நேற்றுவரை நடிப்பு, நாலு பேரை சேர்த்துக்கொண்டு கட்சி என்று microwave சமையல் செய்ய அரசியல் ஒன்றும் இயக்குனர் சொன்னபடி பேசி, காலைக்கையை ஆட்டி நடனம் என்ற பேரில் செய்து காசு பார்க்கலாம் அரசியலில் அடிபட்டு, இடிபட்டு, நாலுபக்க விமர்சனங்கள் எல்லாம் சந்தித்து, மக்களுக்காக ஏதாவது நல்லது செய்து என்று வெகு தூர பயணம் இருக்கிறது இவருக்கு அரசு கஜானாவை வழித்து இலவசங்களைக்கொடுப்பதில் கட்சிகளுக்குள் போட்டாபோட்டி மக்களின் தலையில் கடன் சுமை, வரிச்சுமையாகத்தானே vidikirathu


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை