மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்:தமிழகத்தில், 'என்கவுன்டர்'சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. யாரை கண்டாலும்துப்பாக்கியால் போலீஸ் சுட்டால், நீதிமன்றங்கள், சட்டங்கள் எதற்கு? துப்பாக்கியால் சுடுவதால் சட்டம் - ஒழுங்கை சரி செய்ய முடியாது. சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துள்ள தி.மு.க., அரசு, அதை மறைக்கவே என்கவுன்டர்நடத்துகிறது.டவுட் தனபாலு: உ.பி.,யில் உங்க கட்சியின் முதல்வர் யோகிஆதித்யநாத் ஆட்சியில், 'என்கவுன்டர்' நடந்தால் மட்டும்,ஆஹா, ஓஹோன்னு கொண்டாடுறீங்க... 'சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுறார்'னு புகழாரம் வாசிக்குறீங்க... அதே, எதிர்க்கட்சிகள் ஆட்சியில என்கவுன்டர் நடந்தால் ஏகடியம் பேசுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷானவாஸ் ஹுசைன்: கர்நாடகமுதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக, லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது. அவரை இப்போது யாராலும் காப்பாற்ற முடியாது. தார்மீக கொள்கை கொஞ்சமாவது மிச்சமிருந்தால், அவர் பதவி விலக வேண்டும். கர்நாடக மக்களும்,சித்தராமையா பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.டவுட் தனபாலு: ஒருவர் மீது வழக்கு பதிவு செய்தாலே, அவர் குற்றவாளியாகிடுவாரா... அந்த வகையில், உங்க கட்சியின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் பெங்களூரில் வழக்கு பதிவு பண்ணியிருக்காங்களே...அவங்களையும் ராஜினாமா பண்ணும்படி வலியுறுத்துவீங்களா என்ற, 'டவுட்' வருதே!தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த்: விக்கிரவாண்டியில் நடக்கும் த.வெ.க., மாநாட்டிற்கு, அடுத்த வாரம் பூமி பூஜை போடப்பட உள்ளது. மாநாட்டில் பங்கேற்போர், கட்சிக்கும், விஜய்க்கும் எந்த களங்கமும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். கடந்த லோக்சபாதேர்தலில், 18 வயது நிரம்பியவர்கள் அதிகமாக ஓட்டளிக்க முன்வரவில்லை. விஜய்க்கு தான் முதல் ஓட்டு என, அவர்கள் முடிவெடுத்துஉள்ளதால் தான் வராமல் இருந்து விட்டனர்.டவுட் தனபாலு: அது சரி... அந்த, 18 வயதுக்காரங்க போடும் ஓட்டுகளால மட்டும், விஜய் முதல்வராகிட முடியும்னு நம்புற அளவுக்கு அரசியல் அப்பாவியா இருக்கீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!