உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன்: தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் ஒரு பகுதி ஆகியவற்றை சேர்த்து தான், வடகிழக்கு பருவமழை கணிக்கப்படுகிறது. இதன்படி, இம்மாதம் மூன்றாவது வாரத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், தென் மாவட்டங்களில், இயல்பை விட குறைவாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. டவுட் தனபாலு: போன வருஷம் பெய்த வடகிழக்கு பருவமழையின் பாதிப்புகளையே, சென்னை உள்ளிட்ட வடமாவட்ட மக்கள் இன்னும் மறக்கலை... அதேபோன்ற பாதிப்பு இந்த பருவ மழையிலும் இருக்கலாம் என்ற எச்சரிக்கையை இப்பவே விடுத்துட்டீங்க... இந்த முறையாவது, தமிழக அரசு உஷாராக இருந்து மக்களை காக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை! அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அ.தி.மு.க.,வின் ஓட்டு, 10 முதல் 15 சதவீதம் குறைந்து விட்டது. கட்சியின் வயது முதிர்ந்த தொண்டர்கள் இறந்ததால், கட்சியின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. தற்போது, 40 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். நாம் இழந்த ஓட்டுகளை பெற, இளைஞர்களை நோக்கி அ.தி.மு.க.,வை கொண்டு செல்ல வேண்டும். அதற்காக, கட்சியில் புதிய இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும்.டவுட் தனபாலு: பவள விழாவை கொண்டாடும் தி.மு.க.,வில், காலத்துக்கு ஏற்ப புதிய உறுப்பினர்களை சேர்க்கிறதுல ஆர்வம் மற்றும் துடிப்புடன் அந்த கட்சி நிர்வாகிகள் பணிபுரிவாங்க... உங்க கட்சியில ஜெ.,க்கு பிறகு, உறுப்பினர் சேர்க்கையில உங்க கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டாம போனது தான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை! ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ: உதயநிதிக்கு வாரிசு அடிப்படையில், துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படவில்லை. அவருடைய திறமை மற்றும் செயல்பாடு காரணமாகவே அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. டவுட் தனபாலு: அதுவும் சரிதான்... உங்களுக்கு எந்த திறமை, செயல்பாடுகள் அடிப்படையில, உங்க தந்தை பதவியை வாரி வழங்கினாரோ, அதே அடிப்படையில தான், உதயநிதிக்கும் ஸ்டாலின் பதவி வழங்கியிருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
அக் 03, 2024 18:48

எத்தனைதான் எச்சரிக்கை செய்தாலும் வடிகால், தூர் வாரல் என்று கைவைக்காமல் நிதியை 'விழுங்கி' விட்டு, 'வரலாறு காணாத மழை, நூற்ராண்டின் ரெகார்டு மழை' பல்லவி பாடுவோம் இப்போதுதான் எங்கள் கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொண்டு படகுகள் வாங்கிவிட்டோம் வரிசை, இன்னொரு வாரிசு விட்டுக்கொடுக்குமா ? 'Sailing in the same boat ' ஆயிற்றே


Rajan
அக் 03, 2024 05:24

ஜூனியர் ஜால்ரா. இதை விட கட்சியை தாய் கழகத்துடன் சேர்ந்து விடலாம். ஒரு சின்னமாவது குறையும்


Rajan
அக் 03, 2024 05:20

எப்படியும் நாங்கள் தயாராக இருந்த மழை அளவை விட அதிகமாக பெய்ந்து விட்டதால் வெள்ளத்தை சமாளிக்க முடியவில்லைனு சொல்லி நிவாரண நிதியை பங்கு போட்டுக் கொள்வார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை