உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

பா.ம.க., தலைவர் அன்புமணி:கனமழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகள், அரசு மற்றும்பொதுத்துறை நிறுவனங்களுக்கு,16ம் தேதி ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 'டாஸ்மாக்' பொதுத்துறை நிறுவனம் என்றாலும், அன்றும் மதுக் கடைகள் திறந்திருந்தன. மதுக் கடைகளுக்கு செல்வோருக்கு மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாதா?டவுட் தனபாலு: நீங்க கேட்கிறது சரிதான்... ஆனாலும், 'விடுமுறை விட்டதால, நாலு மாவட்ட ஊழியர்களும் நல்லா சரக்கு அடிச்சு, ஜாலியா இருக்கட்டும்'னு மதுக் கடைகளைதிறந்து வச்சிருந்தாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!பா.ம.க., செய்தி தொடர்பாளர்பாலு: 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 பணிகளில், 15,000 பேரை நிரப்பும் அளவுக்கு காலி இடங்கள் இல்லை' என, அமைச்சர் கயல்விழி கூறியுள்ளார். 2021ம் ஆண்டு தி.மு.க., தேர்தல் அறிக்கையில், '3.50 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டுஇருந்தது. இந்த மூன்று ஆண்டில்,32,774 பணியிடங்கள் மட்டுமேநிரப்பப்பட்டுள்ளன. மீதி பணியிடங்களை காக்கைகள் துாக்கி சென்று விட்டனவா அல்லது தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் உறுதி அளித்தது வடிகட்டிய பொய்யா?டவுட் தனபாலு: அரசியல் தலைவர்களின் வாக்குறுதிகளைசீரியஸா எடுத்துக்கலாமா... 'நானோ, என் குடும்பத்தாரோ அரசு பதவிக்கே வர மாட்டோம்'னு உங்க தலைவர் ராமதாஸ் கூடத்தான் சத்தியம் செஞ்சாரு...அதை அவர் ஏன் நிறைவேற்றலை'ன்னு தி.மு.க.,வினர் திருப்பி கேட்டா, உங்களால் பதில் தர முடியுமா என்பது, 'டவுட்'தான்!தமிழக முதல்வர் ஸ்டாலின்: மழை நிவாரண பணிகள் குறித்து,சமூக வலைதளங்களில்பாராட்டுகள் வருகின்றன. அதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்கின்றனர்; அது குறித்து, நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி; அதை தொடர்ந்து செய்கிறோம். அரசின் முழு திறனை பயன்படுத்தும் வகையில் மழை இருந்தது. எந்த மழை வந்தாலும்,அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது. டவுட் தனபாலு: இப்ப 20 செ.மீ., மழை என்பதால், 'ஈசி'யாசமாளிச்சுட்டீங்க... வடகிழக்கு பருவ மழைக்கான, 'டிரெய்லர்' தான் இது... 'மெயின் பிக்சர்' இனிமே தான் இருக்கு... அதையும்எதிர்கொண்ட பின் இப்படி பெருமிதப்பட்டால், 'டவுட்'டே இல்லாம அரசை பாராட்டலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
அக் 19, 2024 18:40

கொட்டும் மழை, கன , மகாகன மழையெல்லாம் டாஸ்மாக்குக்கு கிடையாது மழையில் நனைந்து, இடி விழுந்தாலும் மதுப்பிரியர்கள் குடித்து ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை தான் அரசுக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை