இந்திய கம்யூ., மாநில செயலர்முத்தரசன்: இந்திய கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு விழா வரும் டிச., 26ம் தேதி துவங்கி, நாடு முழுதும் ஓராண்டுக்கு கொண்டாடப்படுகிறது. 'நான் ஆட்சிக்கு வந்ததும், தற்போதையதமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன்'என சீமான் சொல்லி இருக்கிறார்.முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். பின், சித்தப்பாவுக்கு என்ன பெயர் வைப்பது என்பது குறித்து யோசிக்கலாம்.டவுட் தனபாலு: அதானே... 'கட்சி துவங்கி, 100 வருஷம் ஆன எங்களாலயே ஆட்சிக்கு வரமுடியலை... 14 வருஷத்துக்கு முன்னாடி கட்சி துவங்கிய சீமான் எல்லாம் ஆட்சிக்கு வந்துடமுடியுமாக்கும்' என்ற உங்க, 'மைண்ட் வாய்ஸ்' சத்தமாகவே கேட்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!தி.மு.க., மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி: தமிழர்களை தீண்டத்தகாதவர்கள் எனக்கூறிய மனுதர்மத்தை எதிரி என சொல்லாமல், தமிழ் மொழியை, தமிழகத்தை பாதுகாத்த, பாதுகாக்கும் திராவிட தத்துவத்தைதான் எதிர்த்து பேசுவேன் என, சீமான் சொல்கிறார் என்றால்,ஒன்று அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.இல்லையேல், வயிறு வளர்க்க அரசியலை பிழைப்பாக நடத்த வேண்டும்.டவுட் தனபாலு: அது சரி... 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு என்ற லட்சியத்தில் தானே தி.மு.க.,வைதுவங்குனீங்க... கட்சி துவங்கி, 75 வருஷம் ஆகியும், அந்த இலக்கை நீங்க அடைஞ்சுட்டீங்களா'என, சீமான் திருப்பிக் கேட்டால்,என்ன பதில் தருவீங்க என்ற, 'டவுட்' வருதே!அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி: விஜய், மக்களால் நேசிக்கப்படும் நடிகராக இருக்கிறார். அவர், தமிழகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்கத்துடன் புதிய கட்சிதுவக்கி இருக்கிறார். அவருடையகட்சிக்கும், மாநாட்டுக்கும்எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல எண்ணத்தோடு யார் அரசியலுக்கு வந்தாலும், அதை திறந்த மனதோடு அ.தி.மு.க., வரவேற்கும். டவுட் தனபாலு: தமிழகத்தில், இரண்டு திராவிட கட்சிகளையும்வீட்டுக்கு அனுப்பி, தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தி, தான் முதல்வராகணும் என்ற நோக்கத்தில் தான் விஜய் கட்சி துவக்கியிருக்காரு... இது, உங்களுக்கு நல்ல எண்ணமா தெரியுதா என்ற, 'டவுட்' வருதே!