உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: மதுவிலக்கை மாநிலஅரசு மட்டும் செய்ய முடியாது; மத்திய அரசோடு இணைந்து தான்செய்ய வேண்டும். மாநில அரசுமதுவிலக்கை கொண்டு வந்தால்,வேறு மாநிலத்திற்கு சென்று குடிப்பர்; கள்ளச்சாராயம் பெருகும். எனவே, மத்திய, மாநிலஅரசுகள் இணைந்து தான், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். டவுட் தனபாலு: மாநில அரசு மதுவிலக்கை கொண்டு வந்துட்டா,எல்லா, 'குடி'மகன்களும் வண்டிபிடிச்சு பக்கத்து மாநிலங்களுக்குபடையெடுத்து போயிடுவாங்களாஎன்ன...? ஆளுங்கட்சிக்கு முட்டுகொடுக்கவே, இந்த மாதிரி வெட்டி வாதங்களை நீங்க அடுக்குவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!அ.தி.மு.க., பொருளாளர் சீனிவாசன்: கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் சொல்ல வேண்டியது. எல்லாரும் தனித்துநின்றால், அ.தி.மு.க.,வும் தனித்துநிற்க தயாராக உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, பழனிசாமி மீண்டும் முதல்வராக நிச்சயம் வருவார்.டவுட் தனபாலு: ஜெ.,தலைமையிலான அ.தி.மு.க., தனியாக நின்று, 2014 லோக்சபாதேர்தல், 2016 சட்டசபை தேர்தலில்வெற்றிக்கொடி நாட்டியிருக்கே...உங்க கட்சிக்கு அப்ப இருந்த மக்கள் செல்வாக்கு இப்ப இல்லையா அல்லது பழனிசாமி தலைமை மீது நம்பிக்கையில்லாமகூட்டணி தேடுறீங்களா என்ற, 'டவுட்' தான் வருது!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மதுவால் மட்டும், தமிழகத்தில்ஆண்டுக்கு 2 லட்சம் பேர்உயிரிழக்கின்றனர். தேசிய அளவில் அதிக விபத்துகள், அதிக தற்கொலைகள், அதிக மனநல பாதிப்புகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. 'மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ள நிலையில், இனியும் மத்திய அரசை காரணம் காட்டி கொண்டு இருக்காமல், தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.டவுட் தனபாலு: மதுவிலக்கைஅமல்படுத்திட்டா, ஆளுங்கட்சிக்குகஜானாவாக இருக்கும், நான்கைந்து பெருந்தலைகள் நடத்தும் மதுபான ஆலைகள் நஷ்டத்துல தள்ளாடிடுமே... அவங்க நஷ்டப்பட்டா, ஆளுங்கட்சிக்கு நிதி வரும் வழி அடைபட்டு, வாக்காளர்களை, 'வளைக்க' முடியாம, தேர்தலில் பாதிப்பு வருமே... அதனால, மதுவிலக்கு என்ற தேன்கூட்டில் கை வைப்பாங்களா என்பது, 'டவுட்' தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rajan A
அக் 27, 2024 22:14

ராமதாஸ் மட்டும் தான் இந்த பிரச்சினையில் பல ஆண்டுகளாக ஸ்டடியாக இருக்கிறார்.


sankaranarayanan
அக் 27, 2024 20:18

மதுவிலக்கை மாநிலஅரசு மட்டும் செய்ய முடியாது மத்திய அரசோடு இணைந்து தான்செய்ய வேண்டும் என்று பேசும் பெரும்தொகையே, மது ஆலைகளை நிர்வாகம் செய்ய கழக கட்சிக்காரர்களிடம் ஒப்படைக்கும் போது மத்திய அரசிடம் கேட்டு செய்தார்களா? எங்கே உங்களுக்கு தனி வருமான அபரிமிதமாக வருகின்றதோ அதை மாநில சுயாட்சிக்கு கொடுக்கச்சொல்வீர்கள் அதில் குற்றம் குறைகள் வந்தால் உடனே மத்திய அரசு பங்கு கொள்ளவேண்டும் என்பீர்கள் இதென்ன கசாப்பு கடையா...


Rajan A
அக் 27, 2024 22:15

அப்போது மது ஆலைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க விடுவீர்களா?


D.Ambujavalli
அக் 27, 2024 19:10

அவர் என்ன செய்வார் ? ‘கூட்டணி தர்மத்தின்’ நிபந்தனைகளில் ஒன்றுதான் எதற்கும் மத்திய அரசின் மேல் பொறுப்பை தள்ள வேண்டுமென்பது.அதனை செவ்வனே செய்கிறார்


Sundaran
அக் 27, 2024 08:16

மதுவிலக்கு மாநில அதிகார வரம்புக்குள் வரும் என்று கூறி உள்ளது . இது தெரியாமல் ஒரு கட்சியின் தலைவர் மத்திய அரசு ஓத்துழைத்தால் தான் இது சாத்தியம் என்று கூறுவதுஆளும் கூட்டணி அரசுக்கு ஜால்றா அடிப்பது தான்


bgm
அக் 27, 2024 08:15

டாக்டர் சார். 2 லட்சம் பேர் ஆண்டுக்கு. தலைக்கு 10 லட்சம் அப்டினா வரி கட்டுற நாங்க எங்க போறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை