உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன்: மதுரையில், 20 ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த், கட்சி மாநாடு நடத்தினார். அதில், 30 லட்சம் பேர் வரை பங்கேற்றனர். 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன. அப்படிஇருந்தும் ஒரு உயிர் பலி கூடஇல்லாமல், அனைவரும்பத்திரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ராணுவ கட்டுப்பாடுடன் விஜயகாந்த்மற்றும் தொண்டர்கள், நிர்வாகிகள்மாநாட்டை சிறப்பாக நடத்தினர். டவுட் தனபாலு: இப்ப என்ன சொல்ல வர்றீங்க...? 'நாங்க நடத்திய மாநாட்டால யாரும் சாகலை... ஆனா, விஜய் நடத்தியமாநாட்டுக்கு வந்து ஆறு பேர் பலியாகிட்டாங்க... அந்த கட்சியினரிடம் கட்டுப்பாடு இல்ல'ன்னுசொல்லாம சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!தென் சென்னை மத்திய மாவட்டகாங்., தலைவர் முத்தழகன்: காங்கிரஸ் என்ன ஆண்டி மடம்நடத்துகிறதா? தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், ஆட்சியில்உரிமை கேட்க கூடாதா? நேற்று துவங்கிய கட்சி, 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும்' என்கிறது. 'ஆட்சியில் பங்கு தருகிறேன்' என, விஜய் கூறி இருப்பதை நாம் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரேனும் அமைச்சராக வேண்டும்.டவுட் தனபாலு: 'ஆசை இருக்குதாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க' என, கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வாங்க... அந்த மாதிரி, ஆட்சியில் பங்கு என்ற உங்க ஆசையை தி.மு.க., ஏத்துக்குதோ, இல்லையோ... உங்க டில்லி மேலிடம் ஏத்துக்குமா என்பது, 'டவுட்'தான்!காங்., மூத்த தலைவர்ப.சிதம்பரம்: 'ஆட்சியிலும்,அதிகாரத்திலும் பங்கு அளிப்போம்' என, நடிகர் விஜய் கூறியுள்ளார்.இதெல்லாம் சாத்தியமா, இல்லையா என்பதை தேர்தல் முடிவு தான் தீர்மானிக்கும். ஒரு காலத்தில், மத்தியில் தனிக் கட்சி தான் ஆட்சி செய்து வந்தது.ஆனால், 1996க்கு பின், பல கட்சிகள் மத்தியில் ஆட்சி செய்துள்ளன. ஆக, சாத்தியம்இல்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியம் ஆகலாம்.டவுட் தனபாலு: மத்தியில் ஒரு கட்சி, அதுவும் உங்க கட்சி தான் நீண்டகாலமா ஆட்சியில் இருந்தது... மாநிலங்களை கொத்தடிமைகளாக நடத்தியதன்விளைவாக, மாநில உரிமைகளைபேசிய கட்சிகள் வேகமாக வளர்ந்து, உங்க கட்சியை வீட்டுக்கு அனுப்பின என்பதுதான், 'டவுட்'டே இல்லாத வரலாற்று உண்மை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ