தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: கடந்த 2011ல் அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணிஅமைத்து மாபெரும் வெற்றி பெற்றது. ஒரே கூட்டணியில் இருந்த கட்சிகளை ஆளுங்கட்சிஆகவும், எதிர்க்கட்சியாகவும் மக்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தக்கூட்டணி தொடர்ந்தால், தி.மு.க.,அரசியலில் இருந்தே காணாமல்போய் விடும் என்பதை உணர்ந்தசில துரோகிகள், சூழ்ச்சி செய்தனர்;கூட்டணியில் பிளவை ஏற்படுத்தினர். அப்போதைய முதல்வர் ஜெ.,க்கும், எதிர்க்கட்சித் தலைவர்விஜயகாந்திற்கும், கடைசி வரைஎந்த பிரச்னையும் இல்லை. டவுட் தனபாலு: சட்டசபையில்,ஜெ.,யை பார்த்து, விஜயகாந்த் நாக்கை துருத்தி சவால் விட்டது...பதிலுக்கு ஜெ., 'இனி, தே.மு.தி.க.,வுக்கு அழிவுகாலம் தான்'னு சாபம் விட்டது எல்லாம் இன்னும்வீடியோ பதிவுகளா இருக்குது என்ற உண்மையை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க, ஓராண்டுக்கு முன்பே சம்மதம் தெரிவித்து இருந்தேன். அதில், முதல்வர் ஸ்டாலின், காங்., - எம்.பி., ராகுல்ஆகியோர் ஏற்கனவே பங்கேற்பதாக இருந்தது. தேதி தள்ளிப் போனதால், தற்போது, விஜய்பங்கேற்பதாக கூறுகின்றனர். தற்போதைய அரசியல் சூழலில், அதில் பங்கேற்பது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்பேன்.டவுட் தனபாலு: அந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளையே, உங்க கட்சியின்துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தான் செய்துட்டு இருக்கிறதா கேள்வி... அதனால,'மாநாட்டில் பங்கேற்க, விஜய்க்கு அழைப்பு விடுத்ததன் பின்னணியில், அவர் இல்லை'ன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா என்ற, 'டவுட்' வருதே!தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு: கிராமத்தில் இருக்கும் தாய்மார்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். பேரன், பேத்திகள் கேட்கும் தின்பண்டங்களைவாங்கி கொடுக்க இயலாமல் இருந்தவர்களுக்கு, மாதம் 1,000ரூபாயை, உரிமைத் தொகையாகமுதல்வர் வழங்கியுள்ளார். இதனால்,பேரன், பேத்திகள் கேட்டதை வாங்கி கொடுக்கும் அளவுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை இந்த அரசு உயர்த்தியுள்ளது.டவுட் தனபாலு: ஏழை பெண்களுக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகை என்பது பெரியஉபகாரம் தான் என்பதை மறுப்பதற்கில்லை... அதே நேரம், இன்றைக்கு தாத்தா, பாட்டிகளைகூடவே வச்சிருக்கிற கூட்டு குடும்பங்களை விரல் விட்டு எண்ணிடலாம் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!