உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி: நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம், 'நாளைய முதல்வர்' என போஸ்டர் அடிக்கும்போது, நாம் துணை முதல்வர் பதவி கேட்டு போஸ்டர் அடிப்பதில் என்ன தவறு? துணை முதல்வர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வேண்டாம் என்றால், அப்பதவியை எனக்கு தாருங்கள்; நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி கேட்பதற்கு யாரும் பயப்பட வேண்டாம்; தைரியமாக கேட்க வேண்டும்.டவுட் தனபாலு: என்னமோ, துணை முதல்வர் பதவியை தங்க தாம்பாளத்தில் வைத்து காங்கிரசுக்கு தி.மு.க., நீட்டுவது போலவும், அதை செல்வப்பெருந்தகை மறுப்பது போலவும் பேசுறீங்களே... ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் எல்லாம் கேட்டீங்க என்றால், 'அதை யார் தர்றாங்களோ, அங்கேயே போயிடுங்க'ன்னு தி.மு.க., கதவை சாத்திடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: அரசு ஊழியர்களை தமிழக அரசு ஏமாற்றி விட்டதாக, த.வெ.க., தலைவர் விஜய், வீட்டுக்குள் இருந்தபடியே எதையும் சொல்லக் கூடாது. மக்கள் பிரச்னை என்றால், அரசியல்வாதியாக அதைத் தீர்க்க அவரும் முன்வர வேண்டும். டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... விஜய், வீட்டை விட்டு வெளியில் வந்து, அரசு ஊழியர்களை சந்தித்துப் பேசி, அவங்களுக்கு நீங்க எப்படி எல்லாம் வாக்குறுதிகள் தந்து ஏமாத்துனீங்க என்பதை தெளிவாகக் கேட்டறிந்து, அதை, தான் எப்படி தீர்த்து வைப்பேன்னு விளக்காம, பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுறது சரியல்ல என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: காஷ்மீரில், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறாமல், வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன், பா.ஜ., அரசு 370வது சட்டப்பிரிவை நீக்கியதை குறை சொல்கிறார். ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நிற்கும்போது, 'இண்டியா' கூட்டணியும், அதன் பங்காளியான திருமாவளவனும், 370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு மட்டுமே எதிராக உள்ளனர்.டவுட் தனபாலு: காஷ்மீரில், 370வது சட்டப்பிரிவை நீக்குறதுக்கு முன்னாடி, அம்மாநிலம் அமைதிப் பூங்காவாக இருந்தது போலவும், 370வது பிரிவை நீக்கிய பின்தான் வன்முறைகள் நடப்பது மாதிரியும் திருமாவளவன் சொல்றாரே... மத்திய பா.ஜ., அரசு மீது குற்றம்சாட்ட கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடக் கூடாதுன்னு திருமாவளவன் நினைக்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramanian Marappan
ஏப் 26, 2025 12:24

டாஸ்மாக் கடையில் பாட்டி லுக்கு பத்து ரூபாய் வாங்கறதுக்கே பத்து ரூபாய் பாலாஜி என்று சொல்லுகிறார்கள். ஆனால் அறநிலையத்துறையில் கட்டண தரிசனம் என்ற பெயரில் அதிக கட்டணம் கொடுப்பவர் சாமி தரிசனம் மிக அருகிலும் பொது தரிசனம் தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு முன் பாகுபாடு காட்டுகின்றனர். கோவிலில் பாகுபாடு காட்டலாம்? ஒவ்வொருவரும் தூரத்தில் இருந்து வெவ்வேறு வழிகளில் பயணம் செய்து சாமியை பார்க்க வருகின்றனர். சாதிய பாகுபாடு போன்று கட்டண பாகுபாடு உள்ளது. அது போக ஓசையின்றித் தரிசனம் செய்பவர்கள் நிறைய உண்டு. காணிக்கை எந்த வகையாக இருந்தாலும் முறையாக கணக்கில் கொண்டு வரவேண்டும். கோவில் கணக்கு வழங்கும் முறையாக மத்திய தணிக்கை துறை மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். மொட்டை போட கட்டணம் இல்லை என்று சொல்லி விட்டு தலைக்கு ரூ. 150 கட்டாய வசூல் நடக்கிறது. இதை 150 ரூபாய் சேகர்பாபு என்று சொல்லலாமா?


D.Ambujavalli
ஏப் 26, 2025 06:39

‘அந்த’ முகாமில், பா ஜாவுக்கே கூட்டணி தேர்தலுக்கு மட்டும்தான், பங்கு பாகம் எதுவும் கிடையாது என்கிறார காங்கிரசின் இன்றைய நிலையில் 4, 5 சீட் கிடைத்தாலே அதிகம், அதில் துணை முதல்வராமே இதுதான் பேராசையின் உச்சம்


சமீபத்திய செய்தி