உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா: தி.மு.க., ஆட்சியில், 98.5 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், 10 சதவீத வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவறான தகவலை கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது பற்றி நேருக்கு நேர் விவாதிக்க, அமித் ஷா தயாரா? டவுட் தனபாலு: அது சரி... 'அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம், மாதாந்திர மின் கணக்கெடுப்பு, காஸ் சிலிண்டர் விலை குறைப்பு, 3.50 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்' என்ற வாக்குறுதி கள் எல்லாம், இந்த ஒன்றரை சதவீதத்தில் அடங்கிடுமா என்ற, 'டவுட்' வருதே!தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்தபோது, ராஜ்யசபா 'சீட்' தருவதாக அ.தி.மு.க., சார்பில் உறுதி கூறப்பட்டது. ஆனால், 'எந்த ஆண்டு தரப்படும் என்பது குறித்து சொல்லும் வழக்கம் இல்லை; என் வார்த்தையை நம்புங்கள்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்; அதை ஏற்றுக்கொண்டோம். 2025ல் தரப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், '2026ல் தே.மு.தி.க., வுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும்' என, பழனிசாமி தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்; பொறுத்தார் பூமி ஆள்வார்.டவுட் தனபாலு: சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத உங்க கட்சிக்கு, 36 எம்.எல்.ஏ.,க் கள் ஓட்டளிக்கக்கூடிய ராஜ்யசபா எம்.பி., பதவியை சும்மா துாக்கி தருவாங்களா...? வர்ற சட்டசபை தேர்தல்ல உங்க கட்சியிலும் கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் ஜெயித்து, சட்டசபைக்கு போனால்தான் ராஜ்யசபா சீட் தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி: சென்னை, தாம்பரம் அரசு சேவை இல்லத்தில், மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில், குற்றவாளி உடனே கைது செய்யப்பட்டுள்ளார். விடுதியில் இருந்த, 100-க்கும் மேற்பட்ட மாணவியர் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என, தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது; இதில், யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும், அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க, அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார். டவுட் தனபாலு: அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் கொடுமை நடந்த பின் தான், அங்க பெண் காவலாளிகளை பணியில் அமர்த்தணும் என்ற யோசனையே அரசுக்கு வந்திருக்குதா... அந்த பெண் காவலாளிகளுக்காவது முழு பாதுகாப்பை இந்த அரசால தர முடியுமா என்ற, 'டவுட்'தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
ஜூன் 12, 2025 18:45

அந்த ‘இளம் விதவைகளுக்கு ஆறுதல்’ என்று மதுவை ஒழிக்க முதல் கையெழுத்துப் போடுவார் என்ற ‘அன்புத்தங்கை’ இவருடைய percentage கணக்கில் மது ஒழிப்புக்கு எத்தனை சதவீதம் மார்க் போடுவார்?


Sridhar
ஜூன் 12, 2025 13:20

மொதல்ல நீட் என்னய்யா ஆச்சு? கல்விக்கடன், நகைக்கடன் தள்ளுபடி.... எப்படின்னு ஏகப்பட்டதை அள்ளிவிட்டானுங்களே? அது எல்லாத்தையும் இந்த 1.5% ல அடக்க பாக்குறானுங்களா? அது எப்படி கொஞ்சம்கூட கூச்சமே இல்லாம இவனுகளால பேசமுடியுது? ஒருவேளை வெக்கம் மானம் இவையெல்லாம் இல்லாத கூட்டத்துக்குத்தான் வோட்டு கிடைக்கும்னு நம்பறானுங்களோ?


Venkat
ஜூன் 12, 2025 20:24

எல்லாம் ஒரு புருடாதான். நீங்க என்ன போய் பாக்கவாபோறீங்க.. ஆனாலும் இவங்க உடுற இந்த புருடாவை நம்ப ஒரு அடிமை கூட்டம் இருக்கே–குவார்ட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் அடிமை கூட்டம் இருக்கும் வரை இவனுகள் புருடாக்கள் வந்துகொன்டே தான் இருக்கும்...


கண்ணன்
ஜூன் 12, 2025 11:07

சதவிதக் கணக்குகளப் பற்றி நன்கு படித்தவரிடம் தான் பேச முடியும்


srinivasan
ஜூன் 12, 2025 06:08

இப்படித்தான் மழைநீர் சேதமடையாமல் இருக்க 4000 கோடி திட்டம் போட்டு 95% 99% 90% நிறைவேற்றியதாக மார்தட்டிக் கொண்ட பிரியா, சேகர்பாபு. மா.சுப்பிரமணியன் போகிறோர் மழை வெள்ளத்தில் சென்னை நாறிய போது காணாமல் போனார்கள் .. மழை நின்ற பிறகு இன்னும் 99.9% பாக்கி இருக்கிறது பணம் பற்றவில்லை என்று கூத்தாடினார்கள். மக்கள் முட்டாள்கள் அல்ல. தேர்தலில் காண்பிப்பார்கள்.


சமீபத்திய செய்தி