உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: பனை மரத்தில் இருந்து கிடைக்கும் கள் குடித்து, யாரும் இறந்ததில்லை; அரசின், 'டாஸ்மாக்' கடைகள் இருந்தும், கள்ளச்சாராய சாவுகள் தொடர்கின்றன. பானையில் சுண்ணாம்பு தடவி வைத்தால் பதநீர்; சுண்ணாம்பு தடவாமல் இறக்கினால் கள். அதை குடித்து இறந்தவர்களால், விதவைகள் உருவாகவில்லை. ஆனால், டாஸ்மாக் மது குடித்து இறந்தவர்களால் தான், விதவைகள் உருவாகி உள்ளனர். டவுட் தனபாலு: கள் விற்பனையை அனுமதித்தால், 'டாஸ்மாக்' வியாபாரம் படுத்து, ஆளுங்கட்சியில் உள்ள மதுபான ஆலை முதலாளிகள் வருமானம், அதல பாதாளத்துக்கு போயிடுமே... அதனால, நீங்க என்ன தான் தலைகீழா போராடினாலும், தமிழகத்தில் கள்ளுக்கு அனுமதி தருவது, 'டவுட்' தான்!பத்திரிகை செய்தி: தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரியத்தின் புதிய தலைவராக, கோவை மாவட்டம், திப்பம்பட்டி, வெ.ஆறுச்சாமி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே, வாரியத்தின் துணை தலைவராக உள்ள கனிமொழியின் பெரியப்பா. ஒரே மாவட்டம், ஒரே தாலுகாவில் வசிக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு, தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது, தி.மு.க.,விலும், துாய்மை பணியாளர்கள் மத்தியிலும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டவுட் தனபாலு: அது சரி... ஒரே குடும்பத்தில் தந்தை முதல்வராகவும், மகன் துணை முதல்வராகவும் இருக்கிறதை மட்டும் ஏத்துக்கிறவங்க, இந்த நியமனங்களை மட்டும் ஏத்துக்க மறுப்பது ஏன் என்ற, 'டவுட்' வருதே!தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: மத்தியில், பா.ஜ., அரசு பொறுப்பேற்று, 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பா.ஜ., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், பொது சிவில் சட்டத்தை தவிர அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொது சிவில் சட்டமும் விரைவில் நிறைவேறும். தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன் அளித்த, 512 வாக்குறுதிகளில், 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.டவுட் தனபாலு: 'அயோத்தியில் ராமர் கோவில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் தடை சட்டம்' என, கடந்த, 11 ஆண்டு பா.ஜ., ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகள் எல்லாம், 1998ல் வாஜ்பாய் பிரதமர் ஆனப்பவே தந்தது... அவற்றை, 2014ல் மோடி, பிரதமரான பிறகு தானே ஒவ்வொன்றா நிறைவேற்றியிருக்காரு... அந்த மாதிரி, தி.மு.க.,வினரும், அடுத்து, 10 - 15 வருஷங்கள் கழித்து ஆட்சிக்கு வந்தால், பழைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Yes your honor
ஜூன் 16, 2025 11:05

சமூக அக்கறை கொண்ட பத்திரிகைகள்கூட திடீரென்று வாஜ்பாய் அரசை மேற்கோள்காட்டியிருப்பதில் இருந்து யானைக்கும் அடிசறுக்கும் என்பதை இப்பொழுது உணர்கிறேன். திரு. வாஜ்பாய் ஜி அவர்கள் ஆட்சி புரிந்த காலகட்டம், சூழ்நிலைகள், கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகள் இன்றைய வலிமைமிகு திரு. மோடி ஜி அவர்களின் ஆட்சிகாலத்தை ஒப்பிடும் பொழுது சிறிது மாறுபட்டு இருந்தன. இவை அறம்சார்ப்புடைய பத்திரிகைகளுக்கும் தெரிந்திருக்கும் என்று மனதார நம்புகிறேன். மேலும், திரு. வாஜ்பாய் ஜி ஆனால் என்ன திரு. மோடி ஜி அவர்கள் ஆனால் என்ன அயோத்தியில் ராமர் கோவில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் தடை சட்டம் போன்ற நாட்டிற்கு அதியாவசிய செயல்பாடுகள் அனைத்தும் பா.ஜ.பா. ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளன என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம். ஒருசில மீடியாக்களில் வைரஸ்கள் ஊடுருவி பழத்தில் ஊசியை செருகுவதுபோல நம் தேசியக் கடவுள் திரு. மோடி ஜி அவர்களின் மாண்பை குறைக்க முற்படுவதையும் நாம் கண்டுள்ளோம். உண்மைகளை மட்டுமே உறக்கச் சொல்லும் தூய்மைமிகு தினமலரின் சமூகப் பணி என்றென்றும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்.


Natanasabapathy pillai
ஜூன் 16, 2025 07:43

டவுட் தனபால் வாஜ்பாய் ஆட்சியில் மெஜாரிட்டி இல்லை ஆகையால் இவைகளை நிறைவேற்ற முடியவில்லை . ஸ்டாலின் மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி செய்கிறார் மேலும் மேலசபை என்று ஒன்று கிடையாது ஆனால் மத்தியில் ஒரு மசோதா இரு சபைகளாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் இரண்டிலும் வாஜிபாய் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை. இவையெல்லாம் தெரியாமல் கருத்து கூறியுள்ளீர்


V Ramanathan
ஜூன் 16, 2025 10:23

சரியான கருத்து கூறியுள்ளீர்கள் திரு நடனசபாபதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை