உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: திருமாவளவன் பலம் அவருக்கே தெரியவில்லை. தி.மு.க.,வை விட, அதிக ஓட்டு வங்கி வி.சி., கட்சிக்கு உள்ளது. ஓட்டு வங்கியை வைத்து சீட் பெற வேண்டும் என்ற எண்ணம், திருமாவளவனுக்கு இல்லை. அவர், தன் செல்வாக்கை சீட் வாங்கும் விஷயத்தில் பயன்படுத்த வேண்டும். வி.சி.,க்கள் ஓட்டு மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுகளை கழித்து பார்த்தால், தி.மு.க.,வுக்கென எந்த ஓட்டு வங்கியும் கிடையாது.டவுட் தனபாலு: அது சரி... இப்படி உசுப்பேற்றி, அவரும் தி.மு.க.,விடம் கூடுதல் சீட்கள் கேட்டு முரண்டு பிடிக்கணும்... அவங்க தர மறுத்தால், கூட்டணியில் இருந்து வி.சி., வெளியேறி வரணும்... அப்படி வந்தால், உங்க அணியில் சேர்த்துக்கலாம்னு, 'கொம்பு சீவி' விடுவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: 'கூட்டணி ஆட்சி இல்லை. அ.தி.மு.க., அதற்கு உடன்படாது' என்ற பதிலை பா.ஜ.,வினருக்கு பழனிசாமி கூறியிருக்கிறார். அதேபோல், 'அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது' என்ற கருத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார். கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சிக்கின்றனர் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். -டவுட் தனபாலு: தி.மு.க.,வை மறைமுகமா மிரட்டுவதற்கு தானே, '234 தொகுதியிலும் போட்டியிடும் தகுதி வி.சி.,க்களுக்கு உண்டு'ன்னு நீங்களும் அடிக்கடி சொல்றீங்க... அதே மாதிரி தான் பழனிசாமியும், பா.ஜ.,வுக்கு இலைமறை காய் மறையா எச்சரிக்கை விடுத்திருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!த.வெ.க., கொள்கை பரப்பு பொதுச்செயலர் அருண்ராஜ்: நடிகர் விஜயின் கோட்டையாக தமிழகம் மாறி வருகிறது. விஜய் களத்துக்கு வரவில்லை என யார் கூறியது? 25 ஆண்டுகளாக அவர் களத்தில் தான் உள்ளார். சமீபத்தில் கூட பரந்துார் சென்று வந்தார். அவரது படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து விட்டார். வெளியே வர விஜய் தயாராக இருக்கிறார்; பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர போலீஸ் தயாராக உள்ளதா? பொதுமக்களின் நலனுக்காக, விஜய் அமைதியாக இருக்கிறார். டவுட் தனபாலு: மாபெரும் மக்கள் தலைவரான எம்.ஜி.ஆரே பொதுமக்களுடன் கலந்து பழகிதான் அரசியல்ல ஜொலித்தார்... அவரை விட விஜய் பெரிய தலைவர்னு சொல்றீங்களா... உங்களது இந்த சால்ஜாப்பு, 'ஆட தெரியாத நாட்டியக்காரி, தெரு கோணல்'னு சொன்ன கதையா இருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஜூலை 04, 2025 01:21

எம்.ஜி.யார் சிவாஜி சினிமாவில் வாங்கியதை விட ரஜினியும் விஜய் கோடிக்கணக்கில் ஒரு படத்துக்கு வாங்குவதை வைத்து அரசியலிலும் எம்.ஜி.யாரை விட ஒஹோ என்று வந்துவிடலாம் என்ற எண்ணம்.


Anantharaman Srinivasan
ஜூலை 04, 2025 01:12

நத்தம் பேச்சைக்கேட்டு திருமா திமுகவிடம் 60 சீட் கேட்டு கொடுக்க வில்லையென்றதும் அதிமுக பக்கம் வந்து 60 சீட் கேட்டால் .?


D.Ambujavalli
ஜூலை 03, 2025 17:11

ஆஹா, எதிர்க்கட்சியே நம் பலத்தை இவ்வளவு சரியாகக் கூறுகிறதே, நம் ஓட்டு வங்கியைக் கொண்டு இன்னும் 10, 15 இடம் கேட்கலாமே என்ற சபலம் ஒரு பக்கமும், ‘இத்தனை பலமாக இருக்கும் நான் ‘அந்தப்பக்கம்’ போனால் உங்கள் கதி என்ன?’ என்று இங்கு கொக்கரிக்கவும் எண்ணினால், ‘குஷாலாகப் போய்க்கொள்ளுங்கள்’ என்று அனுப்பி வைத்துவிடுவார், இன்னொரு வைகோவாகத்தான் இவர் நிற்க வேண்டும்


Ambika. K
ஜூலை 03, 2025 10:28

நத்தம் விஸ்வநாதன் சொல்வது மிகவும் சரி. சில விஷ செடிகளை அகற்றுவது கடினம். தீயிட்டு கொளுத்த வேண்டும். அதே போல தான் இதுவும்.கொம்பு சீவிவிட்டு முட்டிக்கிட்டு சாவட்டும் என்று விட்டு விட வேண்டும்.


புதிய வீடியோ