உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக, காங்., கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழு தலைவர் தங்கபாலு: தமிழகம் முழுதும் காங்கிரசின் மூத்த முன்னோடிகள், கட்சிக்காக பல நிலைகளில் சொத்துக்களை வழங்கியுள்ளனர். இந்த சொத்துக்களை பராமரித்து, கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும், ஆக்கிரமிப்பில் இருக்கும் கட்சியின் சொத்துக்கள் ஒன்று விடாமல் மீட்கப்படும். எத்தனை பெரிய மனிதர்களிடம் சொத்துக்கள் இருந்தாலும், யாருக்கும் அஞ்சாமல் அதை மீட்போம். டவுட் தனபாலு: சொத்துக்களை எல்லாம் மீட்டுட்டா மட்டும் தமிழக காங்கிரஸ் கட்சி வளர்ந்துடுமா என்ன... தி.மு.க.,வுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த மாதிரி கட்சியை நடத்திட்டு இருக்கும் வரை, தமிழக, காங்., வளர்ச்சி என்பது கானல் நீர் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: எம்.எல்.ஏ., அருளை பொறுப்பில் இருந்து நீக்க, அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பா.ம.க., நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள், பா.ம.க.,வின், எம்.எல்.ஏ., மட்டுமல்ல; கட்சியின் கொறடா. கட்சியின் சட்டசபை குழு தலைவராக, ஜி.கே.மணி இருக்கிறார். ஜி.கே.மணி வாயிலாக சபாநாயகருக்கு கடிதம் கொடுத்து தான், அருளை நீக்க முடியும். அதற்கு, கட்சி நிறுவனரான நான் அனுமதி கொடுக்க வேண்டும்.-டவுட் தனபாலு: எம்.எல்.ஏ.,வை நீக்கும் அதிகாரம், உங்க மகன் அன்புமணிக்கு இல்லைன்னு சொல்றீங்களே... பிறகு எதுக்கு அவருக்கு தலைவர் பதவி கொடுத்து அமர வச்சீங்க... வெறும் அலங்கார பொம்மையா அந்த பதவியில் இருக்க விரும்பாமல் தான், உங்களுக்கு எதிரா அன்புமணி போர்க்கொடி துாக்கிட்டாரு என்பதில், 'டவுட்'டே இல்லை!தி.மு.க., முன்னாள் அமைச்சர் பழனியப்பன்: 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சி ஆரம்பித்துள்ள விஜய், மாலை, 6:00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார். அது, நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். தெருவிற்கு வராத, மக்களுடன் போராடாத ஒரு தலைவர் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார். அவர் பின்னால் யாரும் போவது சரியல்ல. இதை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நடிகரை நம்பி அரசியல் செய்ய இளைஞர்கள் போனால், எதிர்காலம் வீணாகும். டவுட் தனபாலு: 'நடிகர்களை நம்பி இளைஞர்கள் போகக்கூடாது'ன்னு சொல்றீங்களே... உங்க கட்சியின் எதிர்காலமா கருதப்படும் நடிகர் உதயநிதியை நம்பி அரசியலுக்கு வரணும்னு நினைக்கிற, பல லட்சம் இளைஞர்களை நீங்க தடுக்குறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Arul Narayanan
ஜூலை 09, 2025 04:40

காங்கிரஸ் சொத்துக்களை மீட்டு ராகுலுக்கு தத்தம் செய்ய வேண்டியது. சத்திய மூர்த்தி பவன் அங்கே போனது மாதிரி தான். போகிற வழியில் இவர் எவ்வளவு ஆக்கிரமிப்பாரோ அனுபவிப்பாரோ?


Anantharaman Srinivasan
ஜூலை 07, 2025 18:46

காங்.. கட்சிதான் அடமானத்தில் இருக்குனு நினைத்தால், சொத்துக்களும் மீட்டெடுக்கும் நிலையில் இருக்கிறதாம். Very good.


D.Ambujavalli
ஜூலை 07, 2025 17:05

9 மணிக்கு கூட்டம் என்றால் 12/ 1 மணிக்கு வரும் 'நடிகர்' தான் மிகவும் நம்பிக்கைக்குரியவர் போலிருக்கிறது இந்த 'நடிகர்கள்', கூத்தாடிகள்' என்ற விமர்சனங்கள் எல்லாம் பூமராங் போல உங்கள் பக்கமே திரும்பும் என்பதை மறந்துவிட்டீர்களே 1


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை