உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

தமிழக துணை முதல்வர் உதயநிதி: வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெண்கள், இன்று விண்வெளிக்கு பயணம் செய்கின்றனர். தமிழக முதல்-வராக பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தை, மகளிர் இலவச பஸ் பயணத்திற்காக ஸ்டாலின் போட்டார். இதன் மூலம் மாதம், 900 ரூபாயை மகளிர் சேமிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின், மகளிருக்கு எப்படி பக்க பலமாக இருக்கிறாரோ, அதேபோல் மகளிர், அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். டவுட் தனபாலு: 'மகளிருக்கு இலவச பஸ் பயணம் எல்லாம் குடுத்திருக்கோம்... தேர்தல்ல, தி.மு.க.,வுக்கு சாதகமா ஓட்டு போடுங்க'ன்னு சொல்லாம சொல்றீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: பாதிக்கப்பட்ட மக்களுக்காக, த.வெ.க., தலைவர் விஜய் நடத்தும் போராட்டம் அவசியமானது தான். ஆனால், அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருந்தால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் தராது. தி.மு.க., அரசுக்கு எதிரான விமர்சனம் என்ற அடிப்படையில் மட்டுமே இது போன்ற பிரச்னைகளை சிலர் கையில் எடுக்கின்றனர். டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், உங்களால போராட்டம் நடத்த முடியலை... தப்பி தவறி ஒன்றிரண்டு போராட்டங்களை நடத்தினாலும், கைகளை கட்டிட்டு கபடி ஆடச் சொல்ற மாதிரி, அரசை விமர்சிக்க முடியாம தவிக்கிறீங்க... இப்ப, விஜய் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு, உங்களது துாக்கத்தை கெடுத்திருப்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு: தமிழகத்தில், 100 நாள் வேலைக்கும், புதிய பள்ளிகள் கட்டுவதற்கும், 'ஜல் ஜீவன்' திட்டத்திற்கும் தர வேண்டிய, 3,500 கோடி ரூபாயை மத்திய அரசு தராமல் நிறுத்தி விட்டது; இந்த ஆண்டுக்கான, 4,000 கோடி ரூபாயையும் தரவில்லை. மத்திய அரசிடம் இருந்து, ஒவ்வொரு முறையும் போராடித்தான் நிதியை பெற வேண்டிய நிலை இருக்கிறது. கடுமையான நிதி நெருக்கடியிலும், மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக, தமிழக முதல்வர் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி காட்டி உள்ளார். டவுட் தனபாலு: நிஜத்தை சொல்லுங்க... தேர்தல் வாக்குறுதிகளா கொடுத்த எல்லா திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் முடித்து விட்டாரா... '100 சதவீதம்வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம்'னு சொல்லி, தமிழக மக்களிடம் உங்களால நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்க முடியுமா என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

shyamnats
ஜூலை 16, 2025 15:03

தமிழ் நாடு போக்குவரத்து கழகங்கள் எல்லாம் லாபத்துலா இயங்கி கொண்டிருக்கின்றன ? நிர்வாக சீர்கேட்டை சரி செய்யாமல், லாப நிலைக்கு கொண்டுவராமல் , மகளிற்கு இலவச பயணம் என்று மேலும் குழிக்குள் தள்ளியதும், தமிழகமே குடியில் தள்ளாடுவதும் தான் இவர்கள் சாதனை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 16, 2025 13:15

மகளிருக்கு இலவச பஸ் பயணம் எல்லாம் குடுத்திருக்கோம். தேர்தல்ல, தி.மு.க.,வுக்கு சாதகமா ஓட்டு போடுங்க... ஆம்பிளைங்களை குடிக்கு அடிமையாக்கி குடும்பத்தை நாசம் பண்ணுன பாவத்துக்கு என்ன பண்ணலாம் ன்னு கேட்டுச் சொல்லு தனபாலு .......


சமீபத்திய செய்தி