உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்: பிரதமர் மோடி தமிழகம் வந்து, 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிந்த திட்டங்களை திறந்து வைத்துள்ளார். தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி கொடுக்கிறார். கடந்த, 2014ல் பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து இதுவரை, தமிழகத்துக்கு, 11 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளார். டவுட் தனபாலு: இத்தனை லட்சம் கோடி ரூபாயை தமிழகத்துக்கு வாரி குடுத்திருக்கோம்னு சொல்றீங்களே... தமிழகத்துக்கான கல்வி நிதி 2,151 கோடி ரூபாயை மட்டும் இழுத்தடிப்பது ஏன் என்ற, 'டவுட்' வருதே!  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக சிலர் கூட்டணிக்கு அழைக்கின்றனர். அப்படி என்றால், முதல்வர் பதவிக்கு நான் தகுதி இல்லாதவனா? 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எனக்கு, முதல்வர் ஆகும் தகுதி இல்லையா? கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், ராகுல் ஆகியோருடன் அரசியலில் பயணித்துள்ள எனக்கு, துணை முதல்வர் பதவி ஆசை காட்டினால் சென்று விடுவேன் என, நினைக்கின்றனர். டவுட் தனபாலு: தி.மு.க., பொதுச் செயலரான துரைமுருகன் கிட்டத்தட்ட, 60 - 65 வருஷம் அரசியல் அனுபவம் உள்ளவர்... அவருக்கு முதல்வர் ஆகும் தகுதியில்லையா என்ன...? என்னதான் தகுதி, திறமை இருந்தாலும், முதல்வர் பதவியில அமர்வதற்கு என்று தனி ராஜயோகம் வேண்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை!  தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்: உயர் பொறுப்புகளில் இருப்போர், அரசு மருத்துவமனைகளுக்கு போகும்போது, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவற்றால், அங்கு வரும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், முதல்வர் போன்றோர் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். அரசு மருத்துவமனை மிக சிறப்பாக இருப்பதால் தான், 2021க்கு பின், நோயாளிகள் வருகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. டவுட் தனபாலு: முதல்வரின் அலுவலக அதிகாரிகள், பாதுகாப்பு போலீசார் எல்லாம் குவியுறப்ப, தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு போகும் பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டாங்களா...? 2021க்கு பிறகு அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருப்பதால் தான் நோயாளிகள் வருகை அதிகரிச்சிருக்கா அல்லது உங்க ஆட்சியால, நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகிடுச்சா என்ற, 'டவுட்'தான் வருது! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
ஜூலை 31, 2025 00:14

திருமா...30 இல்லே 50 வருட சர்வீஸ் ஆனாலும் முதல்வர் துணை முதல்வராக மச்சமும் உச்சந்தலையில் சுழியும் வேண்டும்.


D.Ambujavalli
ஜூலை 30, 2025 17:16

யப்பா நாங்கள்லாம் அரை நூற்ராண்டுக்குமேல் கட்சியில் இருந்து, ஏழெட்டு தேர்தலில் எம். எல். ஏ ஆனா பிறகும் துணை முதல்வர் கனவுகூட எட்டவில்லை.உள்ளாட்சி என்று கூட எட்டிப்பார்க்காமல் ஒரே மாநிலத்தேர்தல், எம். எல். ஏ, கையோடு அமைச்சர், அடுத்த படி து. அமைச்சர் என்று எங்களில் பாதி வயதுப் பிள்ளை உட்கார்ந்துகொண்டு எங்களுக்கு மீட்டிங் நடத்துகிறது நாங்கள் அடங்கிக்கிடக்கிறோம். உங்களுக்கு முதல்வர் தகுதி ….. well said திருமா


RAM MADINA
ஜூலை 30, 2025 17:14

மாசு இல்ல புரியல தனியார் ஹாஸ்பிடல் ல இருக்குற தனியார் செக்யூரிட்டி பார்க்குற வேலைய கூட தமிழ்நாடு போலீஸ் பார்க்காத ?


Rajan A
ஜூலை 30, 2025 04:06

செய்யாத வேலைக்கு கூலியை எந்த மடையன் கொடுப்பான்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை