உள்ளூர் செய்திகள்

டவுட் தனபாலு

மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம்: கோரிக்கைகளை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்திய, அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளையை, தமிழக அரசு நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு பணி மாறுதல் செய்துள்ளது. இது போன்ற பழி வாங்கும் நடவடிக்கைகள், அரசுக்கு கெட்ட பெயரை தான் ஏற்படுத்தும். ஒரு அமைப்பின் தலைவர், கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வது இயல்பான விஷயம். இதற்காக பழி வாங்குவது என ஆரம்பித்தால், எந்த அமைப்பின் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ஏதோ கூட்டணியில் இருக்கிறதால, அடிக்கடி போராட்டம் நடத்துற உங்களை எல்லாம் கண்டுக்க மாட்டேங்கிறாங்க... இதே, எதிர்க்கட்சி முகாமுக்கு போய் போராட்டம் பண்ணி பாருங்க... தமிழகத்துல இருக்கிற அத்தனை ஜெயில்களையும் உங்களுக்கு சுத்தி காட்டிருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!  பத்திரிகை செய்தி: த.வெ.க., தலைவர் விஜய், வரும் 15ம் தேதி, மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்க உள்ளார். இதற்காக, பல்வேறு வசதி களுடன் கூடிய நவீன பிரசார வேன் தயார் செய்யப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பின் போது, பிரசார வேனை தொண்டர்கள் நெருங்காமல் இருக்க, இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. வேனின் நான்கு புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டவுட் தனபாலு: 'பவுன்சர்' களை விட்டு தொண்டர்களை குப்பை போல துாக்கி வீசுறதும் இல்லாம, தன் பிரசார வேனை கூட தொண்டர்கள் நெருங்கக் கூடாதுன்னு நினைக்கிற விஜய், மக்கள் சந்திப்பு பயணம் நடத்தி, என்னத்த சாதிக்க போறார் என்ற, 'டவுட்' தான் வருது!  தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி போகுமிடமெல்லாம் மக்கள் அலைகடல் போல திரளுவதாக ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனால், கூட்டப்படும் கூட்டம் காசு கொடுத்து வரவழைக்கும் கூட்டம். அ.தி.மு.க., மட்டுமல்ல, அனைத்து கட்சியினரும் காசு கொடுத்து தான் கூட்டத்துக்கு ஆட்களை திரட்டி வருகின்றனர். ஆனால், தே.மு.தி.க.,வில் ஒரு நாளும் அப்படி செய்தது இல்லை. முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ளார்; அவருக்கு வாழ்த்துகள். டவுட் தனபாலு: நல்லது... இப்போதைக்கு அ.தி.மு.க.,விடம், 'டீலிங்' படியவில்லை என்பது இதன் மூலமா தெரியுது... அதனால தான் பழனிசாமிக்கு குட்டும், ஸ்டாலினுக்கு வாழ்த்தும் வருது... ஆனா, தேர்தல் நெருங்க நெருங்க, இந்த குட்டும், பாராட்டும் இடம் மாறாம இருக்குமா என்பது தான், 'டவுட்!' 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
செப் 03, 2025 16:29

இன்னும் 'பழைய நினைப்புடா பேராண்டி ' என்று இந்தம்மா என்னவோ கட்சியை ஒவ்வொரு பெரிய கட்சியும் வரவேற்பதுபோலொரு பிம்பத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள் அதெல்லாம் விஜயகாந்தோடு போய்விட்டது எதற்கும் ஆளும் கட்சிக்குத் துண்டு போட்டு வைப்போம், ஓரிரண்டு sweet box தேறாதா என்ற நப்பாசைதான்


கண்ணன்
செப் 03, 2025 09:39

ஏற்கனவே உள்ள சிரிப்பு அரசியல்வாதிகள் போதாதென்று கம்யூக்களும் இப்போது நகைச்சுவை நடிகர்களாக மாறிவருகின்றனர்


Rajan A
செப் 03, 2025 05:19

இநதம்மா கட்சி இருப்பது போல் காட்டுவதை யார் கேட்பார்கள்? லெட்டர் பேடு கட்சி வைத்து கொண்டு இவ்வளவு பேச தைரியம் வேணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை