வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திரைப்பட பிரபலம் சில காலங்களில், அடுத்த தலைமுறை இளைய கதாநாயகர்கள் நுழைந்தால் சரிய ஆரம்பித்துவிடும் அதற்குள் அரசியலில் ஒரு நிலையான இடத்தில் அமரலாம் என்ற இவரது ஆசையை ஏதோ பெரிய தியாகம் செய்துவிட்டதைப்போல அலட்டிக்கொள்கிறாரே ரஜினியும்தான் ‘இதோ வருகிறேன் , வந்துவிட்டேன்’ என்று கிளித்தட்டு ஆடினார். அரசியலில் ஜெயிப்பது, இரண்டு பெரிய முதலைகளை எதிர்த்து, சாத்தியமில்லை என்று தெரிந்துகொண்டார். 74 வயதிலும் திரைத் துறையில் மட்டுமே focus செய்கிறார். மஹா அலட்டலுடன் நுழைந்த கமல், இன்று அந்த முதலைகளின் ஒன்றில் ஐக்கியமாகிவிட்டார்
தப்பித்ததவறி முதல்வராகி விட்டால், பதவி அதிகாரம் ராஜமரியாதை . தினமும் கோடிக்கணக்கில் சுருட்டலாமே என்ற பேராசைதான்.
திரு. செல்வ பெருந்தகை ஐயா அவர்களே, நீங்கள் கேட்பது நியாயமான கோரிக்கை. தேர்தலில் கூட்டணி என்பது பங்காளி உரிமை போன்றது. காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு முறையும் திமுக விற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது. தெய்வத்திரு கருணாநிதி அவர்கள் கேட்டு வாங்கினார், மிரட்டியும் வாங்கினார். தெய்வத்திரு முரசொலி மாறன், திரு தயாநிதி மாறன், திரு அழகிரி, திருமதி கனிமொழி, திரு ராசா, திரு பாலு, என பல உதாரணங்கள் சொல்லலாம். மத்தியில் பங்கு கேட்கும் திமுக, மாநிலத்தில் ஏன் பகிர்வதில்லை? இந்த விஷயத்தில் ஆந்திர மாடல் கடைப்பிடிக்கலாமே. திரு சந்திர பாபு அவர்கள் திரு பவன் கல்யாண் அவர்களை துணை முதல்வர் ஆக்கினார். தேர்தலில் கூட்டணி, ஆட்சியில் பங்கு என்ற ஒப்பந்தத்துடன் 2026 தேர்தல் களத்தில் இறங்குங்கள். திமுக விடம் அடகு வைக்க பட்ட காங்கிரஸ்ஐ மீட்டெடுங்கள். சுயமரியாதையை காப்பாற்றி கொள்ளுங்கள். தெய்வத்திரு நேருவோ அல்லது தெய்வத்திருமதி இந்திராவோ இருந்திருந்தால் காங்கிரஸ் இப்படி இருந்திருக்குமா? திமுக வை நசுக்கி இருப்பார்கள். நான் உங்களை திமுக விடம் சண்டை போட சொல்ல வில்லை. தோழமையாய் தேர்தலை சந்தியுங்கள். பங்காளியாய் ஆட்சியில் பங்கெடுங்கள்.