உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

த.மா.கா., தலைவர் வாசன்: தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியை, த.மா.கா.,வுடன் இணைத்துள்ளார். நம் கட்சி, 12 ஆண்டுகளாக மலர் படுக்கையில் இல்லை; முள் படுக்கையில் தான் உள்ளது. அதில் இருந்து நம் கட்சியை மீட்கவே, தமிழருவி மணியன், த.மா.கா.,வுடன் இணைந்துள்ளார். வெற்றி, தோல்வி முக்கியமல்ல; த.மா.கா.,வில் கூட்டுக் குடும்பமாக பயணிப்பதே இலக்கு. டவுட் தனபாலு: கடந்த, 12 வருஷங்களா த.மா.கா., முள் படுக்கையில் இருந்தாலும், நீங்க மட்டும் எப்படியாவது ராஜ்யசபா எம்.பி.,யாகி சொகுசா டில்லிக்கு போயிடுறீங்களே... உங்களையே நம்பி, தன் கட்சியை இணைத்துள்ள தமிழருவி மணியனை, ஒரு கவுன்சிலர் பதவியிலாவது அமர்த்தி அழகு பார்ப்பீங்களா என்ற, 'டவுட்' வருதே! l தமிழக முதல்வர் ஸ்டாலின்: ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ வேண்டும். அதற்கு கிறிஸ்துமஸ் போன்ற விழாக்கள் துணை நிற்க வேண்டும். மத சார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்பும் நாங்கள், சிறுபான்மையினருக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்போம். தி.மு.க., ஆட்சி தான் சிறுபான்மையினருக்கு பொற்கால ஆட்சி. டவுட் தனபாலு: இந்த மூன்று மதத்தினரையும் நீங்க, ஒரு தராசில் வைத்து தான் மதிப்பிடுறீங்களா... கிறிஸ்துமஸ், ரம்ஜான் நோன்பு திறப்பு விழாக்கள்ல கலந்துக்கிற நீங்க, தீபாவளி பண்டிகையில் மட்டும் ஏன் கலந்துக்கிறது இல்லை... அட, வாழ்த்து கூட சொல்ல மாட்டேங்கிறீங்களே... மூணு மதத்தினரையும் ஒரே மாதிரியா அணுகாத நீங்க, 'ஒரு தாய் வயிற்று பிள்ளைகளா வாழுங்க'ன்னு அறிவுரை மட்டும் சொல்லலாமா என்ற, 'டவுட்' வருதே! பத்திரிகை செய்தி: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் செந்தில்நாதன், நள்ளிரவில் அக்கட்சியின் மகளிரணி நிர்வாகி வீட்டிற்கு சென்ற வீடியோ பரவியதால், அவரது மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டது. டவுட் தனபாலு: 'யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை' என்ற நடிகர் வடிவேலு காமெடி காட்சி மாதிரி இருக்கே... 'திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வந்திருக்கேன்'ன்னு ஊர் ஊரா நடிகர் விஜய் தம்பட்டம் அடிச்சுக்கிறாரு... அவரது கட்சியினரோ, எல்லா தில்லுமுல்லுகள்லயும் ஊறி திளைச்சவங்களா இருக்காங்களே... தப்பி தவறி விஜய் ஆட்சிக்கு வந்தாலும், இந்த மாதிரி ஆட்களை வச்சுக்கிட்டு எப்படி நல்லாட்சி தர முடியும் என்ற, 'டவுட்' வருதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
டிச 23, 2025 12:00

ஒருதாய் மக்கள் நாம்மென்போம் என்று உதடு உச்சரித்தால் போதாது. அது உள்ளத்திலிருந்து வர வேண்டும். இந்து என்றால் திருடன் என்று சொன்னவர் தான் கருணாநிதி. அவர் பிள்ளையும் பேரனும் ஓட்டுக்காக பேசும் பேச்சை கேட்டு ஏமாறாதீர் மக்களே..


D.Ambujavalli
டிச 23, 2025 06:23

நீங்க ஒண்ணு, ஒரே தாய் வயிற்று அண்ணனையே, குடும்பத்தில் அண்டவிடாமல், மூலையில் முடக்கிப்போடுமளவுக்கு தந்தையை மூளைச்சலவை செய்து துரத்துமளவும், மாற்றாந்தாய் மகளை மாநிலத்தில் எந்தப் பதவியும் கொடுக்காமல் நைசாக வடக்கிலேலேயே நகர்த்தி வைக்குமளவும் 'சகோதர பாசம்' கொண்ட எங்களைத்தவிர வேறு யார் இந்த 'ஒருதாய் மக்கள் நாமென்போம்' பாடல் பாட தகுதியானவர்கள் உள்ளார்கள்?


Chandhra Mouleeswaran MK
டிச 23, 2025 05:11

அட வாசன் கட்சி "இன்னும்" இருக்கிறதா என்ன? ஒற்றை மாட்டு வண்டி என்ற சிவகெங்கைச் சீம்ம்மான் பசி வெளியேறி இத்தாலிய மாஃபியாவில் கணக்கப்பிள்ளையாகச் சரணடைந்த பிறகு, தமாக்கா, தமாக்காதான் காங்கிரஸ் என்ற களவாணிப் பெயரை வெட்டி விட்டொழித்தால்தான் கொஞ்சமாவது உங்கள்மேல் நம்பிக்கை வரும் அது சரி யார் புண்ணியத்தால் ராஜ்ய சபை எம்பி ஆனீர்கள் அண்ணென்? தமிழருவி மணியனுக்கும் ஒரு தனிக் கட்சியா? இந்த ரீதியில் பார்த்தால் எல்லாக் கட்சியுமே தலீவருகளைத் தவிரத் தொண்டர் யாருமே இல்லாத "ஏக மனதுக் கட்சி" ஆகத்தானே இருக்கின்றன? தனிக் கட்சி என்று ஆரம்பித்து மாவட்டக் கட்சி ஆகி, லெட்டர்பேடு கட்சி ஆக வளர்ந்து இப்போது ரப்பர் ஸ்டாம்ப் சைஸிற்குச் சுருங்கி ஆயிற்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை