உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தி.மு.க.,வை சேர்ந்த, துாத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி: துாத்துக்குடி தொகுதியில், பா.ஜ., நடத்தும் தெருமுனை பிரசார கூட்டங்களில் பேசும் அனைவரும் முதல்வர், துணை முதல்வர், கனிமொழி மற்றும் தி.மு.க., ஆட்சி குறித்து அவதுாறு பரப்புகின்றனர். தி.மு.க., ஆட்சி குறித்து தவறான கருத்துகளை பேசுபவர்கள், இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லா விட்டால், 30 ஆண்டுகளுக்கு முந்தைய அதிரடி அரசியல் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அமைதியாக செல்வதால், நாங்கள் அச்சப்படுவதாக நினைக்க வேண்டாம். டவுட் தனபாலு: மறைந்த உங்க தந்தை பெரியசாமி, அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர்... கருணாநிதியே அவரை, 'எனது முரட்டு பக்தர்'னு தான் அழைப்பார்... உங்க சகோதரியான அமைச்சர் கீதா ஜீவனை மீறி, உங்களால அரசியலில் ஜொலிக்க முடியாததால, தந்தை வழியில் பயணிப்பது என்ற முடிவை எடுத்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! lll அணைக்கட்டு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார்: வேலுார் மாவட்டத்தில் உள்ள வேலுார், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் தி.மு.க.,வினரே போட்டியிடுவர். முதல்வர் காலை பிடித்தாவது, இதற்கு சம்மதிக்க வைப்போம். டவுட் தனபாலு: கடந்த தேர்தலில், உங்க கூட்டணி கட்சிகள் தயவில் தானே நீங்க எம்.எல்.ஏ.,வானீங்க... கூட்டணி கட்சிகளுக்கு சீட்கள் ஒதுக்க கூடாதுன்னு சொல்ற உங்களுக்கு, வர்ற தேர்தலில் தலைமை சீட் தந்தாலும், கூட்டணி கட்சி களின் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது, 'டவுட்'தான்! lll பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பா.ம.க.,வின் பலம் அப்படியே தான் உள்ளது. பா.ம.க., தொண்டர்களின் மனதில் சிறு கலக்கம் ஏற்பட்டுள்ளதை அறிவேன். நாம் பயணிக்க வேண்டிய துாரம் நீண்டது. எனவே, கிடைக்கும் வாகனங்களில் ஏறி பயணித்தால், இலக்கை அடையவே முடியாது. நமக்கான வாகனம், இதோ நம் அருகே வந்துவிட்டது. அதில்தான் பயணிக்க போகிறோம். நாம், நம் இலக்கை அடைந்து, லட்சியத்தை வெல்வோம். டவுட் தனபாலு: எந்த கட்சியுடன் கூட்டணி என்ற முடிவுக்கு வந்துட்டீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது... உங்க மகன் அன்புமணி ஏற்கனவே ஏறி உட்கார்ந்துட்ட, அ.தி.மு.க., வாகனத்தில் நீங்களும் பயணிக்க போறதா தகவல்கள் பரவுதே... மகனுக்கு வெள்ளைக்கொடி காட்ட தயாராகிட்டீங்களோ என்ற, 'டவுட்' வருதே! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

srinivasan
மார் 01, 2026 05:36

30 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த அதிரடி இப்போது செல்லாது ஏனென்றால் மக்கள் விழித்துக் கொண்டு விட்டனர் உங்கள் பாட்டான் காலத்து அரசியலை இப்போது உள்ள இளைஞர்கள் உடைத்து தூளாக்கி விடுவார்கள். சோடி பாட்டிலும் சைக்கிள் செயினும் சுற்றும் ரவுடிக் கூட்டத்துக்கு அஞ்சாத இளைஞரிபடை இப்போது உள்ளது. தூக்கிப் போட்டு மிதித்து விடுவார்கள் உங்கள் பழைய அரசியலை


முக்கிய வீடியோ