உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்: சமையல் காஸ் பிரச்னை தீராததால், பலருக்கு கஷ்டமும், நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. மத்திய, பா.ஜ., அரசு உஷாராக இருந்திருந்தால், எரிபொருள் பற்றாக்குறையை குறைத்திருக்கலாம். தமிழகத்தில், தி.மு.க., அரசு முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால், நம் மாநிலத்தில் மட்டுமாவது பற்றாக்குறையை குறைத்திருக்கலாம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் சாரை கேட்டால், 'நமக்கும், அதற்கும் சம்பந்தமில்லை' என்கிறார். டவுட் தனபாலு: மேற்காசிய போரால், உலகம் முழுக்க பல நாடுகள்லயும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுது... ஏதோ, இந்தியாவிலும், தமிழகத்திலும் மட்டும் தான் பற்றாக்குறை என்பது போல பேசுறீங்களே... 'விஜய்க்கு அரசியல் தெளிவு இல்லை'ன்னு உங்களை எதிர்க்கும் சில கட்சியினர் சொல்றதை, உண்மையாக்க பார்க்கிறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! lll பத்திரிகை செய்தி: தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., -- அ.தி.மு.க., கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று அணிகளுக்கு போட்டியாக, நடிகர் விஜய் தலைமையிலான, த.வெ.க., களமிறங்கியுள்ளது. தேர்தலுக்கு புதியவர்களான, த.வெ.க.,வினர் தேர்தல் செலவுக்கு பணமின்றி மிகுந்த சிரமப்படுகின்றனர். 'தேர்தல் முடியும் வரை செலவுகளை எப்படி சமாளிப்பது' என, புரியாமல் தவித்து வருகின்றனர். டவுட் தனபாலு: 'மக்களுக்காக, பல நுாறு கோடி ரூபாய்களை வழங்கும் சினிமாவை விட்டுட்டு வந்திருக்கேன்'ன்னு, அந்த கட்சியின் தலைவர் விஜய் உருக்கமா பேசுறாரே... அவர் சம்பாதித்து வைத்திருக்கும் கோடிகளை எடுத்து, வேட்பாளர்களின் செலவுக்கு தரலாமே... முதல்வர் பதவியில் அமர நினைக்கிறவர், தன் கட்சி வேட்பாளர்கள் ஜெயித்தால் தான், அந்த கனவு நனவாகும் என்பதை யோசிக்க மறந்துட்டாரோ என்ற, 'டவுட்' வருதே! முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்: சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் கார்த்திக், என் நண்பர். நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள். அவரை வெற்றி பெறச் செய்தால், உங்கள் தொகுதிக்கு என்னென்ன தேவையோ, அனைத்தையும் அவர் செய்து கொடுப்பார். அதற்கு நான் உத்தரவாதம். டவுட் தனபாலு: முதல்வர் குடும்பத்தில் ஏற்கனவே கனிமொழி, உதயநிதி அரசியல்ல இருக்காங்க... இந்த தேர்தல்ல, உங்க நண்பரை வேட்பாளராக்கிட்டீங்க... அடுத்த தேர்தல்ல நீங்களும் போட்டியிட வசதியா, நண்பரை முதலில் களமிறக்கி, ஆழம் பார்க்கிறீங்களோ என்ற, 'டவுட்' எழுதே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
ஏப் 06, 2026 19:49

அரசியல் அரிச்சுவடி தெரியாத விஜய் லோக்கல் problem போல் சமையல் காஸ் பற்றி பேசியிருப்பது அரசியலில் MGR காலடியெடுத்து வைத்த காலத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் தபால்தலை போஸ்ட் கார்டு விலைகளை குறைப்பேன் என்று சொன்னதை போலுள்ளது.


sankar
ஏப் 06, 2026 15:48

மாப்பிளை சார் கலத்தில் குதித்து விட்டார்


duruvasar
ஏப் 06, 2026 10:26

தமிழ்நாட்டில் தற்சமயம் எல்லாம் ஊடகங்களும் இப்போ விட்டால் இனிமே எப்பவுமே இல்லை என்ற பாணியில் செயல்படுவது நன்கு தெளிவாகியுள்ளது.


D.Ambujavalli
ஏப் 06, 2026 09:33

எந்த கட்சிக்கும் weining பெரிஒது உண்டு. விஜய் அகலக்கால் வைக்காமல் சில தொகுதிகளில் போட்டியிட்டுத் தன் பலத்தை நிர்ணயம் செய்து கொண்டிருக்கலாம் ‘கெட்ட பின்பு ஞானி ‘


arun precast
ஏப் 06, 2026 08:11

You are biased and controlled by DMK allies.. what else we expect. When MGR started his own party in 1972 same thing happend. DMK didnt allow him to release his movie, and gave him so many obstacles, so may issues. At the end he MGR ruled TN till his death. same scene same DMK , then his father , now the son . all newspapers and journalism are doing slavery to DMK . I thought Dinamalar will be different, what to say its all politics.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை