உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

வி.சி., கட்சி எம்.பி., ரவிகுமார்: மத்திய அரசு வெளியிட்ட, 2023ம் ஆண்டின் சிறைகள் குறித்த அறிக்கையின்படி, நாடு முழுதும் குண்டர் தடுப்பு சட்ட கைதுகளில், தமிழகம் முன்னிலையில் உள்ளது. நாடு முழுதும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,916. இதில், தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்கள், 1,354 பேர். வரும் காலங்களில், இச்சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை, முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும். டவுட் தனபாலு: தமிழகத்தில், 2023ல் தி.மு.க., ஆட்சிதான் நடந்துச்சு... நீங்களும், அந்த கூட்டணியில் தானே இருந்தீங்க... அப்பவே, முதல்வரா இருந்த ஸ்டாலினிடம் இதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுங்கன்னு கேட்காம இருந்தது ஏன் என்ற 'டவுட்' வருதே! lll காங்., கட்சியை சேர்ந்த தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ்குமார்: காமராஜரின் ஆட்சி அமைய வேண்டும் என காத்திருந்த காங்., தொண்டர்களின் விருப்பம் நிறைவேறி உள்ளது. தொண்டர்கள் தான், இந்த அமைச்சர் பதவியை தந்துள்ளனர். மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நாங்கள் பணியாற்றுவோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும். மக்கள் பணிகளோடு, காங்.,கை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம். டவுட் தனபாலு: நல்லது... 59 வருஷங்களுக்கு பிறகு, தமிழக அமைச்சரவையில் இடம் பிடிச்சிருக்கீங்க... இப்போதைக்கு கூட்டணி அரசில் இருக்கும் நீங்க, உங்க கட்சி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமா இருந்தா, 'தமிழகத்தில் காமராஜர் ஆட்சி' என்ற உங்க கனவு ஒருநாள் நனவாகும் என்பதில், 'டவுட்'டே இல்லை! தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ்: தி.மு.க.,வுக்கு, 50 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்தேன். 2021ல் திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக தேர்வானேன். இந்த தேர்தலில், மாற்று கட்சியில் இருந்து வந்த மேயர் தினேஷ்குமாரை ராஜினாமா செய்ய வைத்து, தெற்கு தொகுதியில், 'சீட்' வழங்கினர். நான் விருப்ப மனுவே அளிக்காத பல்லடம் தொகுதி எனக்கு வழங்கப்பட்டது. மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, என்னை போன்ற விசுவாசிக்கு தலைமை கொடுக்கவில்லை. இதனால், திருப்பூர் மத்திய மாவட்ட செயலர், கட்சி உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். டவுட் தனபாலு: உங்களுக்கு போட்டியா சீட் வாங்கிய தினேஷ்குமார், மேயர் பதவியையும் இழந்து, தெற்கு தொகுதியில் தோத்தும் போயிட்டாரே... ஒருவேளை பல்லடத்தில் நீங்க ஜெயித்திருந்தால், இந்த ராஜினாமா முடிவை எடுத்திருக்க மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
மே 24, 2026 22:52

திருப்பூர் மா.செயலாளர் விலகியதற்கு காரணம் திமுக இனி தேறுவது கடினம் என்பதே காரணம்.. அதை சொல்லாமல் நொண்டி சாக்கு எதற்கு..?


duruvasar
மே 24, 2026 16:06

கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில் , அதற்க்கு எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாமல் தமிழகம் மக்கள் நலுனுக்காக பாடுபடுவேன் என்பற்று சும்மா ஒரு பேச்சுக்கு உதார் விடுகிறார் என்ற டவுட்டு உங்களுக்கு ஏன் வரவில்லை . நடுநிலை" ஊடகமாக மாற போகிறீர்களா என்ற டவுட்டு வருகிறது .


கண்ணன்
மே 24, 2026 09:36

தி மு க ஆட்சியில் பிரியாணி இருந்தது


D.Ambujavalli
மே 24, 2026 08:19

இவர் கட்சியை விட்டு விலகுவது இருக்கட்டும் ஆனால் மனதுக்குள் ‘என்னை விளக்கிவிட்டு அவருக்கு கொடுத்தீங்களே, அவர் மட்டும் ஜெயித்து உங்கள் கட்சியை தூக்கிவிட்டாரா? என்ற எக்களிப்பும் இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை