உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை: அ.தி.மு.க.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்களை ஆசை வார்த்தைகளால் கவர்ந்து, த.வெ.க.,வுக்கு அழைத்து சென்றுள்ளனர். கட்சித் தாவல் தடை சட்டம் தொடர்பான விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், அவர்களின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டு ஆளும் கட்சியில் சேர்த்தது சர்ச்சைக்குரியது. கட்சி தாவிய நான்கு பேரும் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். த.வெ.க., அரசு அனுபவமற்ற கத்துக்குட்டி அரசு; எல்.கே.ஜி., நிலையில் உள்ளது. டவுட் தனபாலு: த.வெ.க., அரசு கத்துக்குட்டியாகவும், எல்.கே.ஜி., நிலையிலும் இருக்குன்னு சொல்றீங்களே... அதனால, உங்க கட்சியில் ஜெயித்த அனுபவம் வாய்ந்த எம்.எல்.ஏ.,க்களை துாக்கிட்டு வந்து, அவங்களிடம் அரசியல் பாடம் படிக்கிறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது! பத்திரிகை செய்தி: சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்த வி.சி.க., தலைவர் திருமாவளவன், தி.மு.க., தலைமை அழுத்தத்தால், போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார். தி.மு.க., தலைமை பேச்சை கேட்காமல் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், தற்போது அமைச்சராகி இருக்கலாம். தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த, கட்சியை வளர்க்க உதவியாக இருந்திருக்கும். நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டோம் என்ற வருத்தத்தில் இருக்கிறார். டவுட் தனபாலு: வி.சி.க., போன்ற கட்சிகள், காலம் முழுக்க அப்படியே இருக்கணும்... தாங்கள் ஒதுக்கும்அஞ்சாறு சீட்களுக்காக, தங்களுக்கு சேவகம் செய்துட்டு இருக்கணும் என்ற தி.மு.க.,வின், 'பெரியண்ணன்' மனோபாவம் திருமாவளவனுக்கு அப்பவே தெரியாதா என்ற, 'டவுட்'தான் வருது! அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வோரை த.வெ.க., வில் சேர்ப்பதன் வாயிலாக, அ.தி.மு.க.,வையும் ஜெயலலிதாவின் தொண்டர்களையும் விஜய் அழிக்க பார்க்கிறார். அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களை விஜய் ஏமாற்ற பார்த்தார்; நல்ல வேளையாக அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். இந்த கஷ்டமான நேரத்தில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் அ.ம.மு.க., இருக்கிறது. டவுட் தனபாலு: உங்க கட்சியில ஜெயித்த ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வும் த.வெ.க., பக்கம் தாவிட்டதால, உங்க கட்சியில் இழுக்க ஆளே இல்லையே... அதனால, அ.தி.மு.க., கூட்டணியை விட்டால் உங்களுக்கு வேறு புகலிடம் ஏதும் இல்லை என்பதில், 'டவுட்'டேஇல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூன் 01, 2026 08:23

வோட்டு. வாங்கி. ஜெயிக்க. ஒரு. கட்சி, வென்றதும். ஒட்டிக்கொள்ள. ஒரு. கட்சி. என்று. கட்சி மாறிய. இந்தப். பச்சோந்திகளை. சேர்ந்த. கட்சிகளும். புறக்கணிக்க. வேண்டும் நாளை. இந்தக். கட்சிக்கும். இதே. நிலை. வரலாம்


D.Ambujavalli
ஜூன் 01, 2026 08:19

கொத்துக். கொத்தாக. கட்சி. மாறுகிறவர்கழில் . எப்படியோ. ‘வழி. தவறிய. சில, ஆடுகள். அந்த. நிலத்தில். மேய்ச்சலுக்கு. வாய்ப்பில்லை. என்று. சில. ‘போன. ’. மச்சான்கள்’ திரும்பி. விட்டார்கள் ஒச்சுப்ய.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை